கலவர பூமியான பிக் பாஸ் வீடு.. டபுள் கேம் ஆடும் வனிதா.. கோபப்படும் சாண்டி.. முகென் கையில என்ன ஆச்சு?

Recommended Video

Bigg Boss 3 Tamil : Highlights : அபியை சமாதானம் செய்யும் Mugen- வீடியோ

சென்னை: பிக் பாஸ் வீட்டிற்குள் விருந்தாளியாக வந்துள்ள வனிதா கொளுத்தி போட்டு குளிர்காய்ந்து வருகிறார்.

பிக் பாஸ் வீட்டுக்குள் விருந்தாளியாக மீண்டும் வந்துள்ளார் வனிதா விஜயகுமார். வந்த முதலே பிரச்சனையை ஆரம்பித்துவிட்டார்.

இன்று அபிராமியிடம் முகென் குறித்து இல்லாதது பொல்லாததையெல்லாம் போட்டுக்கொடுத்தார். இதனால் ஒரே நாளில் முகெனுக்கு எதிராக மாறிவிட்டார் அபிராமி.

அடிக்க பாய்ந்த முகென்

அடிக்க பாய்ந்த முகென்

முன்னர் வெளியான புரமோவில் அபிராமிக்கும் முகெனுக்கும் இடையே நடக்கும் சண்டை ஒளிபரப்பானது. அப்போது அபிராமியை அடிக்க சேரை தூக்கினார் முகென்.

சுத்தி கூட்டம்

சுத்தி கூட்டம்

இந்நிலையில் தற்போது வெளியான மூன்றாவது புரமோவில் பெட் ரூமில் உட்காந்திருக்கிறார் முகென். அவரை சுற்றி வனிதா, சேரன், சாண்டி, கவின், தர்ஷன் ஆகியோர் உள்ளனர்.

நோன்டி நோன்டி

நோன்டி நோன்டி

அப்போது பேசும் சாண்டி, நேற்று என்ன அக்கா சொன்ன? எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஏன் நோன்டி நோன்டி பெரிதாக்குகிறீர்கள் என்று கேட்டுவிட்டு கோபமாக செல்கிறார்.

வனிதா டபுள் கேம்

வனிதா டபுள் கேம்

அதற்கு பதிலளிக்கும் வனிதா, பஞ்சாயத்து பண்ணாததால் இங்கு பிரச்சனையில்லை என்று நினைத்துக்கொண்டிருக்கிறீங்ரகள். இங்கு பிரச்சனை இருக்கு, நீ செய்வது தவறு என நான் அவனிடம் சுட்டிக்காட்டியிருக்கிறேன். ஏன்னா அபிராமியை பற்றி எனக்கு நன்றாக தெரியும் என அபிராமியை தவறாக பேசுவது போல் டபுள் கேம் ஆடுகிறார் வனிதா.

எமோஷன் வேண்டாம்

எமோஷன் வேண்டாம்

அப்போது பேசும் தர்ஷன் உன்னுடைய வீக்னஸை அவள் பயன்படுத்திக்கொள்கிறாள் என்று முகெனிடம் கூறுகிறார். கவின் இவ்ளோ எமோஷன் வேண்டம் என்கிறார்.

கையில் என்ன ஆச்சு?

கையில் என்ன ஆச்சு?

ஒரு வழியாக கவினும் சாண்டியும் வனிதாவுக்கு எதிராக இன்று குரலை உயர்த்தியுள்ளனர். அப்போது முகெனின் கையை இறுக்கமாக பிடித்திருக்கிறார் சேரன். இதனை பார்க்கும்போது சேரன் கையில் ஏதோ அடிப்பட்டது போல் தெரிகிறது. அடிப்பட்டதா அல்லது ஆசுவாசப்படுத்த கையைப் பிடித்திருக்கிறாரா என்பது தெளிவாக தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X