ஒரே ஒரு போட்டோ.. சத்தமில்லாமல் திரும்பவும் பற்ற வைத்த ‘வத்திக்குச்சி’.. வனிதாக்கா நீங்க மாறவேயில்ல!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் படத் தொகுப்பாளர்களின் புகைப்படத்தை வெளியிட்டு, அவர்களுக்கு செமையாக டோஸ் வாங்கி கொடுத்துள்ளார் வனிதா.

Recommended Video

Bigg Boss Losliya with Abhirami : அபி அக்காவுடன் விளையாடும் தங்கை லாஸ்-வீடியோ

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி முடியும் தருவாயில் வனிதா எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் கோபத்தில் திட்ட ஆரம்பித்து விட்டனர்.

பிக் பாஸ் சீசன் 3யில் ஆரம்பத்தில் நேரடி போட்டியாளராகவும், பின்னர் வைல்ட் கார்ட் எண்ட்ரியாகவும் சென்று வரலாற்றை மாற்றியவர் வனிதா. பைனஸ்சின் போது சாண்டி கூறியது போல, பிக் பாஸ் வீட்டில் நடந்த பெரும்பாலான பிரச்சினைகளுக்கு விதை போட்டவர் வனிதா தான்.

அதனால் தான் பிக் பாஸ் வீட்டில் அவருக்கு வத்திக்குச்சி என்ற பட்டப்பெயரே வைக்கப்பட்டது. பதனீ பதனீ என்ற ரேஞ்சில் சத்தமில்லாமல் பற்ற வைத்து விட்டு, போட்டியாளர்களை அடித்துக் கொள்ள வைத்து விடுவார்.

வத்திக்குச்சி வனிதா

வத்திக்குச்சி வனிதா

பிக் பாஸ் வீட்டில் தான் இப்படி என்றால், நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னரும் அதே வேலையைத் தான் அவர் செய்துள்ளார். ஆனால் இம்முறை அவர் மாட்டிவிட்டது போட்டியாளர்களை அல்ல. பிக் பாஸ் நிகழ்ச்சியின் சில எடிட்டர்களை.

பிக் பாஸ் குரல்

பிக் பாஸ் குரல்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் பின்னணியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்தது நமக்குத் தெரிந்த விசயம் தான். கமலும் கூட சில எபிசோட்களில் அதனை மக்களுக்கு தெரியப்படுத்தினார். ஆனால் பிக் பாஸ் குரலைப் போலவே அந்த தொழிலாளர்களின் முகங்களும் மக்களுக்கு அறிமுகம் இல்லை.

பிக் பாஸ் எடிட்டர்ஸ்

பிக் பாஸ் எடிட்டர்ஸ்

மற்ற தொழிலாளர்களைக் காட்டிலும் பிக் பாஸ் ரசிகர்களிடம் அதிகம் பாராட்டு மற்றும் திட்டு வாங்கிக் கட்டிக் கொண்டது நிகழ்ச்சியின் படத்தொகுப்பாளர்கள் தான். அதிலும் குறிப்பாக புரொமோக்களில் கவிலியா காதலுக்கு செம பிஜிஎம் போட்டு தெறிக்க விட்டார்கள்.

வனிதா போட்ட போட்டோ

இந்நிலையில் நிகழ்ச்சியின் கடைசி தினத்தில் பிக் பாஸ் படத்தொகுப்பாளர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை வனிதா தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் நான்கு படத்தொகுப்பாளர்கள் உள்ளனர். இந்த புகைப்படத்தைப் பார்த்த கோபத்தில் கொந்தளித்து விட்டனர் நெட்டிசன்கள்.

செம டோஸ்

‘ஓ நீங்க தானா அது. யாரு தேவையில்லையோ அவங்க பத்தின நெகடிவ்வா காட்டறது. யாரு உங்களுக்கோ முக்கியமோ அவங்களைப் பத்தி பாசிடிவ்வா காட்டறது. உங்களைத் தான் ரொம்ப நாளா தேடிட்டு இருந்தோம்' என சகட்டுமேனிக்கு திட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X