வனிதா இன்னும் திருந்தவே இல்ல போல! பணம்தான் முக்கியம்.. இன்னும் கெட என்ன இருக்கு?

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 1 : Day 51 : கொளுத்தி போடும் Vanitha அக்கா- வீடியோ

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது முறையாக பங்கேற்றுள்ள வனிதா இம்முறையும் தனது பெயரை மொத்தமாக டேமெஜ் செய்து கொண்டுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த வனிதா விஜயகுமார், இரண்டாவது வாரத்திலேயே பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். அவரது அதிகாரமும், ஆணவமும்தான் அவரை அவ்வளவு சீக்கிரம் வெளியேற்றியது.

ஆனால் அவர் பேன பிறகு நிகழ்ச்சியில் சுவாரசியமே இல்லை, வனிதா அக்காவை மீண்டும் கூட்டி வாருங்கள் என்று கோரிக்கை விடுத்தனர் ரசிகர்கள். இதனால் டிஆர்பிக்காக மீண்டும் பிக்பாஸ் வீட்டில் ரீஎன்ட்ரி ஆனார் வனிதா.

ஃபுல் பிரிப்பரேஷன்

ஃபுல் பிரிப்பரேஷன்

வந்தது முதல் தான்தான் பெரிய ஆள் என்பது போல் பேசினார். வீட்டில் உட்காந்து மற்ற எபிசோடுகளை பார்த்து பிரிபேர் செய்து கொண்ட வனிதா, வந்த வேகத்திற்கு தனது ஆட்டத்தை தொடங்கினார்.

அபிராமிக்கு வெறுப்பு

அபிராமிக்கு வெறுப்பு

வந்தவுடன் அபிராமியின் காதலுக்கு வேட்டு வைத்துள்ளார் வனிதா. முகெனின் காதல் மற்றும் காதலி குறித்து அபிராமியிடம் இல்லாததையெல்லாம் சொல்லி முகென் மீது வெறுப்பை ஏற்படுத்தினார்.

மல்லுக்கட்டும் அபிராமி

மல்லுக்கட்டும் அபிராமி

வனிதாவின் மகுடிக்கு மயங்கிய அபிராமி, முகெனிடம் சண்டைபோட காத்திருந்ததாக தெரிகிறது. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திய அபிராமி முகெனிடம் மல்லுக்கட்டுகிறார்.

புரிந்து கொண்ட சாண்டி

புரிந்து கொண்ட சாண்டி

ஏற்கனவே அதிக கோவப்படும் முகென் இன்று கொஞ்சம் ஓவராக போய்விட்டார். சேரை தூக்கி அடிக்கும் அளவுக்கு அவருக்கு கோவம் வந்துவிட்டது. வனிதா வந்த பிறகுதான் வீட்டில் சண்டை நடக்கிறது என்பதை சாண்டியும் கவினும் நன்கு புரிந்துகொண்டனர்.

அபிராமி கெட்டவள்

அபிராமி கெட்டவள்

தனது குட்டு உடைந்துவிட்டதை அறிந்த வனிதா, அபிராமி கெட்டவள் என்பது போல் அவளை பற்றி எனக்கு தெரியும் அதனால் தான் முகெனின் தவறை சுட்டிக்காட்டுகிறேன் என பிளேட்டை மாற்றி போட்டு நல்லவர் போல் நடிக்கிறார்.

டோன்ட் கேர் பாலிசி

டோன்ட் கேர் பாலிசி

முன்னர் பிக்பாஸ் வீட்டில் இருந்த போது ரசிகர்கள் தன்னை கழுவி ஊற்றியதை பற்றி கொஞ்சமும் கவலைப்படவில்லை வனிதா. காசுக்காக மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ள வனிதா தனது பெயர் எப்படி கெட்டாலும் கெடட்டும், பணம்தான் முக்கியம் என்று டோன்ட் கேர் பாலிஸியை பின்பற்றி வருகிறார்.

100 நாள் ஆட்டமும்

100 நாள் ஆட்டமும்

இதற்கு முன்பு பிக்பாஸ் வீட்டில் இருந்தபோதே சின்ன சின்ன பிரச்சனையெல்லாம் ஊதி பெரிதாக்குவார். சண்டையை மூட்டிவிட்டு யாருக்கும் தெரியாமல் சிரிப்பார். இப்போது மக்கள் பார்ப்பார்கள், வெளியேற்றிவிடுவார்கள் என்ற பயம் இல்லாமல் 100 நாள் ஆட வேண்டிய ஆட்டத்தையும் இந்த ஒரே வாரத்தில் மொத்தமாக ஆடிவிட்டுதான் செல்வார் போல.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X