For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அப்போ எல்லாம் நடிப்பா வனிதா.. உங்க முன்னாள் புருஷன் இப்படி சொல்லியிருக்காரே?!

  |

  சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற வனிதா குறித்து அவரது முன்னாள் கணவர் ஆனந்த் ராஜன் பரபரப்பு குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளார்.

  பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற வனிதா விஜயகுமார் தனது அதிகாரத்தாலும், ஆணவ மிக்க பேச்சாலும் பார்வையாளர்களிடம் வாங்கிக்கட்டினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் 15 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்ட அவர், தான் வைத்ததுதான் சட்டம் என ராஜ்ஜியம் நடத்தி வந்தார்.

  சண்டை மூட்டிவிடுவது, பிரித்துவிடுவது, மற்றவர்களை தரக்குறைவாக பேசுவது என தன்பாட்டுக்கு புகுந்து விளையாடினார். இதனால் வெறுப்பில் இருந்த மக்கள் அவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து இரண்டாவது வாரமே வெளியேற்றினர்.

  இதெல்லாம் நல்லால்ல.. உனக்கும் குழந்தை இருக்கு.. பொறுப்பா பேசு.. சிவகுமாரை வெளுத்துவாங்கிய வனிதா!இதெல்லாம் நல்லால்ல.. உனக்கும் குழந்தை இருக்கு.. பொறுப்பா பேசு.. சிவகுமாரை வெளுத்துவாங்கிய வனிதா!

  வைல்டு கார்டு

  வைல்டு கார்டு

  ஆனால் அவர் போன பிறகு சண்டை சச்சரவு இன்றி அமைதியாக இருந்தது. பிக்பாஸ் வீடு அமைதியாக இருந்ததை பார்வையாளர்கள் ரசிக்கவில்லை. இதனால் டிஆர்பி குறைந்ததால் மீண்டும் வனிதாவை வைல்டு கார்டு என்ட்ரியாக்கினார் பிக்பாஸ்.

  திட்டிய பார்வையாளர்கள்

  திட்டிய பார்வையாளர்கள்

  வந்த வேலையை ஆரம்பித்த வனிதா, அபிராமி வெளியேற வழிவகுத்தார். ஃபைனல்ஸ் வரை போவார் என எதிர்பார்க்கப்பட்ட மதுமிதாவும் வெளியேற காரணமாக இருந்தார் வனிதாதான் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் வனிதாவை திட்டி தீர்த்தனர் நெட்டிசன்கள்.

  சிவகுமார் கருத்து

  சிவகுமார் கருத்து

  ஆனால் வனிதாவின் மகள்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தபோது வனிதா ஒரு தாயாக நடந்து கொண்ட விதமும் அனைவரின் பாராட்டையும் பெற்றது. இதுதொடர்பாக நடிகர் சிவகுமார் டிவிட்டர் பக்கத்தில் வனிதா குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.

  அக்கறையுள்ள அம்மா

  அதாவது வனிதாவுக்கு எனது சல்யூட்டுகள். அவள் ஒரு அழகான தாய். அவரின் மகள்களின் வளர்ப்பை பார்த்தால் அவர் எப்படிப்படி அக்கறையுள்ள அம்மா என்பது தெரிகிறது. அவளுடைய ஒரே பிரச்சனை அவளின் வாய் மட்டுமே.. அவள் மீது கூறப்பட்ட சில குற்றச்சாட்டுகள் பொய்யாக இருக்கலாம் என்று இப்போது நான் உணர்கிறேன்! என்று கூறினார்.

  சண்டை

  சண்டை

  இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த வனிதா, சிவகுமார் தன்னை விமர்சித்து டிவிட்டியதை பார்த்து கோபப்பட்டு அவருக்கு டிவிட்டரிலேயே பதில் கொடுத்தார்.

  கொடூரமான பெண்

  கொடூரமான பெண்

  வனிதாவின் இந்த டிவிட்டை பார்த்த அவரது முன்னாள் கணவரான ஆனந்த் ராஜன், வனிதா குறித்து பகீர் புகார்களை கூறியுள்ளார். அதாவது, வனிதா ஒரு கொடூரமான பெண். அவள் தனது குழந்தைகளையும் அவர்களின் எதிர்காலத்தையும் குழப்பிவிட்டார். அவள் தன்னை ஒரு நல்ல தாயைபோல மீடியாவுக்காக மட்டுமே காட்டிக்கொள்கிறார்.

  பால் கூட கொடுத்ததில்லை

  வனிதா ஒருபோதும் குழந்தைகளுக்கு டயாப்பர் கூட மாற்றியதில்லை. குழந்தைகளுக்கு பால் கூட கொடுத்ததில்லை. எந்த நல்ல குணமும் இல்லாத ஒரு பெண் வனிதா என சிவகுமாரின் பக்கத்தில் டிவிட்டியிருந்தார்.

  எக்ஸ் கணவரா?

  இதனை பார்த்த நடிகரும் சுஜாவருணியின் கணவருமான சிவகுமார், நீங்கள் அவரின் ஒரிஜினல் எக்ஸ்? என கேட்டுள்ளார்.

  விலகியிருங்கள்

  அதற்கு ஆமாம் என்று பதிலளித்துள்ள ஆனந்த்ராஜன், உண்மையிடம் இருந்து விலகியிருங்கள் என கூறியுள்ளார்.

  ஜெனிதாவின் அப்பா

  மேலும் நான்தான் ஜெனிதாவின் அப்பா என்றும் அவள் இரண்டரை வயது குழந்தையாக இருந்த போது அவளை விட்டுவிட்டு சென்றுவிட்டாள். இப்போது அவள் வளர்ந்ததும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக அவளை கடத்திச்சென்றுவிட்டாள் என்றும் கூறியுள்ளார்.

  கடத்தல் புகார்

  கடத்தல் புகார்

  வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, தனது மகள் ஜெனிதாவை அவர் கடத்தி சென்றுவிட்டதாக வனிதா மீது புகார் கொடுத்திருந்தார் ஆனந்த் ராஜன். இதுதொடர்பாக போலீசார் பிக்பாஸ் வீட்டிற்கே சென்று விசாரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  English summary
  Vanitha's ex husband Anandrajan says Vanitha is not a good mother. She pretennding as if She is a good mother for mrdia only.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X