இதையெல்லாம் கவனிச்சீங்களா.. வனிதாவின் அடுத்த டார்கெட் சேரன்தான்.. இன்னைக்கு என்ன நடக்கப்போகுதோ?

Recommended Video

Bigg Boss 3 Tamil: Day 9: மீரா கத்தியது போல் வனிதாவை கத்தினாள் என்ன ஆவது

சென்னை: வனிதாவின் அடுத்த டார்கெட் சேரன்தான் என்பது நேற்று அவர் போட்ட கொக்கிகளிலும் பற்ற வைத்த விஷயங்களிலுமே தெரிந்தது.

மற்றவர்களை சண்டையில் இழுத்துவிட்டு குளிர்காய்வதில்
வனிதாவுக்கு அப்படி ஒரு ஆனந்தம். இது அவர் நடந்துகொள்ளும் விதத்திலேயே தெரிகிறது.

மற்றவர்களிள் ஒபினியன்களை வீட்டில் திணிக்கக்கூடாது என்று கூறும் வனிதா, தனது ஒபினியன்களை மட்டும் திணிப்பார். அவரை யாரும் எதிர்த்து பேசக்கூடாது. பேசினாலோ அல்லது அட்வைஸ் செய்தாலோ மதுமிதாவுக்கு ஏற்பட்ட கதிதான்.

 வச்சு செய்யும் வனிதா

வச்சு செய்யும் வனிதா

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே மதுமிதாவை போதும் போதும் என வச்சு செய்து வருகிறார் வனிதா. பிக்பாஸ் வீட்டில் உள்ள மொத்த பேரையும் அவருக்கு எதிராக திருப்பிவிட்டுவிட்டார்.

அடுத்த டார்கெட் சேரன்தான்

அடுத்த டார்கெட் சேரன்தான்

அடுத்தபடியாக வனிதா தனது டார்கெட்டாக பிக்ஸ் செய்திருப்பது சேரனைதான். பிக்பாஸ் வீட்டில் குறை ஒன்றும் சொல்ல முடியாத அளவுக்கு கண்ணியமாக, பெரிய மனுஷன் என்ற தன்மையோடு நடந்து வருகிறார் சேரன்.

வலுவான போட்டியாளர்

வலுவான போட்டியாளர்

இதனால் சேரனுக்கு மக்கள் மத்தியல் நல்ல ஆதரவும் வரவேற்பும் கிடைத்துள்ளது. மேலும் பிக்பாஸ் வீட்டில் வலுவான போட்டியாளராகவும் உள்ளார் சேரன்.

சேரன் பெயர் நாமினேஷன்

சேரன் பெயர் நாமினேஷன்

இதனால் சேரனை எப்படியாவது வெளியேற்ற வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார் வனிதா. இதற்காகதான் எந்த பிரச்சனையும் இல்லாத நிலையில் கடந்த வாரம் சேரனின் பெயரை வனிதா நாமினேட் செய்தார்.

வார்னிங் கொடுத்த சேரன்

வார்னிங் கொடுத்த சேரன்

இதைத்தொடர்ந்து, நேற்று முகென், மீராவிடம் கத்தியதை கண்டித்தார் சேரன். பிக்பாஸ் வீட்டில் கோபமாக கத்தவோ அல்லது கையை ஓங்கவோ யாருக்கும் சுதந்திரம் இல்லை என்று கூறுகிறார் சேரன்.

முகெனை உசுப்பேற்றும் வனிதா

முகெனை உசுப்பேற்றும் வனிதா

இதனை கேட்டுவிட்டு முகெனை தனியாக அழைத்து பேசும் வனிதா, மீராவிடம் நீ கத்தியதை நான் சரி என்று சொல்கிறேன். நீ கத்தியது சரிதான், கத்துவதற்கு உரிமை இல்லை என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை, பிக்பாஸை தவிர என சேரன் குறித்து முகெனிடம் நஞ்சை விதைக்கிறார் வனிதா.

 சேரனை வம்புக்கு இழுக்கும் வனிதா

சேரனை வம்புக்கு இழுக்கும் வனிதா

பின்னர் வீட்டின் கண்ணாடி கதவுகளை வெட்டியாக வம்புக்கு இழுக்க முடிவு செய்த வனிதா, வீட்டின் கேப்டனான மோகன் வைத்யாவிடம், முதலில் சேரனை கிச்சனை கிளீன் செய்ய சொல்லுங்கள். எந்த வேலை முக்கியமோ அதை முதலில் செய்ய சொல்லுங்கள் என்றார்.

 சேரனை வம்புக்கு இழுக்கும் வனிதா

சேரனை வம்புக்கு இழுக்கும் வனிதா

அதைக்கேட்ட மோகன் வைத்யா, வனிதாவுடன் சேரனிடம் செல்கிறார். அப்போது சேரனிடம் கிச்சனை கிளீன் செய்யுமாறு கூறுகிறார் வனிதா. ஏற்கனவே கிளீன் செய்துவிட்டேன் என்று சேரன் கூறியபோதும் விடாமல் அவரை அழைத்து சென்று பூண்டு தோல்களை காட்டுகிறார். பின்னர் அவற்றை சுத்தம் செய்கிறார் சேரன்.

ஷெரினிடம் பற்றவைக்கும் வனிதா

ஷெரினிடம் பற்றவைக்கும் வனிதா

இதைத்தொடர்ந்து மீண்டும் டேபிள்களை சுத்தம் செய்கிறார் சேரன். அப்போது சேரனின் கிளீனிங் டீமில் உள்ள ஷெரினிடம், நீ ஏன் இவ்வளவு கஷ்டப்படுகிறாய்? மோகன் வைத்யாவும், ஃபாத்திமாவும் சும்மாவே இருக்கிறார்கள், என்றுகூறி மீண்டும் ஒரு கொக்கியை போட்டுப் பார்க்கிறார்.

கேப்டனிடம் கோரிக்கை

கேப்டனிடம் கோரிக்கை

இதில் எவற்றிலுமே சிக்கவில்லை சேரன். பின்னர் கேப்டனான மோகன் வைத்யாவை அழைக்கும் சேரன், எதுவாக இருந்தாலும் நீங்களே சொல்லுங்கள், அதற்கு தான் கேப்டன் என்கிறார். இப்படியாக முடிந்தது நேற்றைய எபிசோடு.

தரமான சம்பவங்கள்

தரமான சம்பவங்கள்

நேற்று போட்ட எந்த கொக்கியிலும் வனிதாவிடம் சிக்கவில்லை சேரன். இந்நிலையில் இன்று அல்லது வரும் எபிசோடுகளில் எப்படியாவது ஒரு சர்ச்சையில் அவரை சிக்கவைத்து பிரச்சனையில் மாட்டிவிட வனிதா முயற்சிப்பார் எனத் தெரிகிறது. இதனால் பிக்பாஸில் வரும் எபிசோடுகளில் தரமான சம்பவங்களை எதிர்பார்க்கலாம் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X