அப்பவே எச்சரித்தேன்.. என் பேச்ச கேட்கல.. நான் டார்கெட் பண்றதா சொன்னாங்க.. எவிக்ஷன் குறித்து வனிதா!
Recommended Video
சென்னை: தர்ஷன் எவிக்ட்டானது குறித்து வனிதா விஜயகுமார் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இரண்டாவது வாரத்திலேயே பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் வனிதா விஜயக்குமார். ஆனால் அவர் மீண்டும் பங்கேற்க இரண்டாவது வாய்ப்பு கொடுத்தார் பிக்பாஸ்.
இதனைத்தொடர்ந்து வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார் வனிதா. வைல்டு கார்டில் இரண்டாவது முறையாக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த வனிதா, தனது சொந்த வீட்டுக்கு வந்தது போல் அதிகாரம் செய்து தூள் கிளப்பினார்.

மீண்டும் வெளியேற்றம்
ஏதோ தனது சொந்த வீட்டுக்கு வந்தது போல் அனைவரையும் மிரட்டி ரிவ்யூ கொடுத்தார் வனிதா. இதனை தொடர்ந்து கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பிக்பாஸ் வீட்டில் இருந்து மீண்டும் வெளியேற்றப்பட்டார் வனிதா.

வச்சு செய்த வனிதா
ஆரம்பத்தில் இருந்தே வனிதாவுக்கும் தர்ஷனுக்கும் ஆகாமல் இருந்தது. பிக்பாஸ் வீட்டில் வனிதாவை முதலில் எதிர்த்து பேசிய நபர் தர்ஷன் தான். இதனாலோ என்னவோ தர்ஷனை வச்சு செய்தார் வனிதா.

தர்ஷனுக்கு எதிராக டிவிட்
ஷெரினுக்கும் தர்ஷனுக்கும் இடையிலான உறவு குறித்து மதுமிதாவிடம் கூறி ஏற்றிவிட்டார் வனிதா. அதுமட்டுமின்றி கிடைத்த கேப்பில் எல்லாம் தர்ஷனை வச்சு செய்தார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்பும் கூட டிவிட்டரில் தர்ஷனுக்கு எதிராகதான் கமென்ட் பதிவு செய்தார்.

லாஸ்லியா வின்னராகனும்
தர்ஷன், கமலின் பேச்சுக்கு ஏற்ப மாறிவிடுவதாகவும், கைத்தட்டலுக்கு ஏற்ப நடந்து கொள்வதாகவும் சொந்த புத்தி கிடையாது என்பது போன்றும் பேசினார் வனிதா. லாஸ்லியா டைட்டில் வின்னராக தகுதியுடையவர் என்றும் கூறினார்.

கடுப்பான தர்ஷன் ஆர்மி
தர்ஷனும், ஷெரினும் செய்யும் வேலைகளால் தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி மன அழுத்தத்திற்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார். இதனால் கடுப்பான தர்ஷன் ஆர்மியினர் வனிதாவை திட்டி தீர்த்தனர்.

இதுதான் உண்மை
தற்போது தர்ஷன் வெளியேற்றப்பட்டுள்ளாதால் வனிதாவை வச்சு செய்து வருகின்றனர். இந்நிலையில் வனிதா இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, தர்ஷனை எனக்கு பிடிக்காது என நினைக்கும் மக்களுக்காக என்று தொடங்கியுள்ள அந்த பதிவில், தர்ஷன் ஆர்மி இதுதான் உண்மை.
அவளைதான் நம்பினான்
முதலில் நான் ஷெரினை ஊக்கப்படுத்தினேன், அவளிடம் கவனம் செலுத்தும்படி கேட்டுக்கொண்டேன். அவளுடைய விளையாட்டை நான் உணர்ந்தபோதுதான் நான் அவனை எச்சரித்தேன். நான் அவனை டார்கெட் செய்வதாக நினைத்தான், அவளைதான் நம்பினான். நான் தீவிரமாக முயற்சி செய்தேன். ஆனால் அவர்கள் என்னை பொய்யர் என்று அழைத்தார்கள். இவ்வாறு வனிதா தனது டிவிட்டில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











