நீ கேப்டனா இருக்கவே லாயக்கு இல்லை.. பொறாமையில் அபிராமியை பொறிந்து தள்ளிய வனிதா!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Abirami : கைகளால் உடம்பை பூரிகொண்ட அபி - வீடியோ

சென்னை: பிக்பாஸ் வீட்டின் புதிய கேப்டனாக தேர்வாகியுள்ள அபிராமியுடன் வனிதா மல்லுக்கு நின்ற சம்பவம் பிக்பாஸ் வீட்டினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

பிக்பாஸ் வீட்டில் வாரம் தோறும் புதிதாக ஒருவருக்கு கேப்டன் பதவி வழங்கப்படுகிறது. அதன்படி ஃபாத்திமா பாபுவால் தேர்வு செய்யப்பட்ட மூன்று பேருக்கு பிக்பாஸ் ஒரு டாஸ்கை கொடுத்தார்.

அதாவது, ஒரு பெல்ட்டில் உள்ள மூன்று ஹுக்குகளை சாண்டி, தர்ஷன், அபிராமி ஆகியோர் தங்களின் பேன்ட் லூப்பில் அந்த பெல்ட்டை மாட்டிக்கொண்டு நடக்க வேண்டும். இதில் யார் முதலில் லூப்பை கழற்றி விடுகிறார்களோ அவர்கள் போட்டியில் இருந்து விலகுவதாக அர்த்தம்.

விட்டுக்கொடுத்த தர்ஷன்

விட்டுக்கொடுத்த தர்ஷன்

இதைத்தொடர்ந்து சாண்டி லூப்பை கழட்டிவிட்டு போட்டியிலிருந்து விலகினார். பின்னர் அபிராமி தர்ஷன் இருவரும் பேசி யாராவது ஒருவர் தலைவராக முடிவு செய்யுங்கள் என்றார் பிக்பாஸ். இதையடுத்து தர்ஷன் லூப்பை கழட்டி விட்டு அபிராமிக்கு எதிராக சிலர் உள்ளனர். அதனால் அபிராமி தலைவராகட்டும் என்று கூறி விட்டுக்கொடுத்தார்.

ஈயாடவில்லை

ஈயாடவில்லை

அபிராமி தலைவரானது அவரது கேங்குக்கே பிடிக்கவில்லை. குறிப்பாக வனிதா, சாக்ஷிக்கு பிடிக்கவில்லை. அபிராமி கேப்டன் ஆன பிறகு அவர்களின் முகத்தில் ஈயாடவில்லை. கேப்டனான அபிராமி, மதுமிதாவுடனான பிரச்சனையை தீர்க்க முயற்சித்தார்.

ஆப்பாக அமைந்த பேச்சு

ஆப்பாக அமைந்த பேச்சு

ஆனால் மதுமிதா மக்கள் கிளாரிஃபை செய்து விட்டார்கள் அதைப்பற்றி பேச வேண்டாம் என கூறியும், அபிராமி வலுக்கட்டாயமாக அந்த பிரச்சனை எடுத்தார். மேலும் பர்சனலாக பேசியதை பொதுவெளியில் தனது கேங்கிடம் கூறினார் அபிராமி. அதுவே அவருக்கு ஆப்பாக அமைந்தது.

நான் விவாதிக்க வேண்டும்

நான் விவாதிக்க வேண்டும்

இதுதான் சமயம் என மதுமிதா பேசினால் நீ எப்படி கேட்டுவிட்டு இங்கு வந்து கேட்பாய் என குதிக்க தொடங்கினார் வனிதா. மதுமிதாவை இங்கு அழைத்து வா, அவள் என்ன கூறினால் என்பதை குறித்து நான் விவாதிக்க வேண்டும் என்றும் கத்தினார் வனிதா.

அப்போ என்ன மார்க்கெட்?

அப்போ என்ன மார்க்கெட்?

வனிதா கத்தியதை பொறுக்க முடியாத அபிராமி இது என்ன மீன் மார்க்கெட்டா இப்படி கத்துகிறீர்கள் என்றார். அவ்வளவுதான் ஆட ஆரம்பித்து விட்டார் வனிதா. நீ எப்படி மீன் மார்க்கெட் என்று கூறலாம்? அன்று உனக்காக கத்தினோமே அப்போ என்ன மார்க்கெட்?

லாயக்கு இல்லை

லாயக்கு இல்லை

நீ கேப்டனாக இருக்கவே லாயக்கு இல்லை, நீ ஸ்டெடி மைன்டிலும் இல்லை, எனவே தான் நீ கேப்டனாகக் கூடாது என்று நான் கையை தூக்கவில்லை. என சரமாரியாக அபிராமியை பொறிந்து தள்ளினார் வனிதா. இதனால் பிக்பாஸ் வீடு ரணகளம் ஆனது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X