மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வனிதா.. வந்த வேகத்தில் சண்டை.. யார் கூட எதுக்குன்னு பாருங்க!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 2 : Day 100 : சாண்டி நீ வேற Level பண்ணிட்டு இருக்க-வீடியோ

சென்னை:பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் வந்துள்ள வனிதா வந்த வேகத்தில் ஹவுஸ்மேட்ஸ்களுடன் சண்டையை ஆரம்பித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய போது முதல் 15 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார் வனிதா. பிக்பாஸ் வீட்டில் ஏற்பட்ட பல பிரச்சனைகளுக்கு அவர் காரணமாக இருந்ததால் மக்களுக்கு அவர் மீது பெரும் வெறுப்பு ஏற்பட்டது.

இதனால் நாமினேஷன் தொடங்கிய இரண்டாவது வாரத்திலேயே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் வனிதா. அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளித்த பிக்பாஸ், அவரை வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே இறக்கினார்.

சண்டைக்கு பஞ்சம் இல்லை

சண்டைக்கு பஞ்சம் இல்லை

ஆனால் அப்போதும் அடங்காத வனிதா, மீண்டும் சண்டைகளை உருவாக்கி குளிர்காய்ந்தார். வனிதா இருந்தால் அந்த இடத்தில் சண்டை சச்சரவுக்கு பஞ்சம் இருக்காது என்ற பிம்பத்தை உருவாக்கி விட்டார் அவர்.

மீண்டும் வீட்டுக்குள்

மீண்டும் வீட்டுக்குள்

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

ஷெரினுடன் மல்லுக்கட்ட

ஷெரினுடன் மல்லுக்கட்ட

இன்று வெளியான முதல் புரமோவில் வனிதா, சேரன், கஸ்தூரி, சாக்ஷி உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்திருப்பது தெரியவந்துள்ளது. வந்த கையோடு தனது வேலையை ஆரம்பித்துள்ளார் வனிதா. ஷெரினுடன் மல்லுக்கட்டும் வனிதா, தர்ஷன் வெளியேறியதற்கு காரணம் நீதான் என அவருடன் சண்டை போடுகிறார்.

மக்களுக்கு புரிந்துவிட்டது

மக்களுக்கு புரிந்துவிட்டது

தர்ஷனும் நீயும் பழகுனது குறித்து நான் கூறிய வார்த்தை நான் போனது போது மக்களுக்கு புரிய வில்லை. இரண்டு வாரம் கழித்துதான் புரிந்துள்ளது. அதன் பிரதிபலிப்புதான் தர்ஷன் வெளியேறியது என்று கூறுகிறார் வனிதா.

நீங்க ஏன் டிஸைட் பண்றீங்க?

நீங்க ஏன் டிஸைட் பண்றீங்க?

இதனால் கடுப்பான சாக்ஷி, நீங்கள் சொல்வதை ஏற்க முடியாது என்று கூற, நீ எதைத் பார்த்து பேசுகிறாய்? நான் பொய் சொல்றேனா அப்போ என அவரிடமும் எகிறுகிறார் வனிதா. அதற்கு நீங்க ஏன் டிசைட் பண்றீங்க என்று கேட்டு எழுந்து செல்கிறார்.

கதறும் ஷெரின்

கதறும் ஷெரின்

பின்னர் நீங்க சொல்றதால பொய் உண்மை ஆயிடாது, உண்மை பொய் ஆயிடாது என்று வனிதாவுக்கு பதிலடி கொடுக்கிறார் சாக்ஷி. இவற்றையெல்லாம் கேட்ட ஷெரின், என்னாலதான் தர்ஷன் வெளியே போயிட்டானா என்று கூறி அழுகிறார். அவரை கஸ்தூரி சமாதானப்படுத்துகிறார். இப்படியாக முடிகிறது புரமோ.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X