மாலைய மாத்த சொன்ன கஸ்தூரி.. வச்சு செய்யும் வனிதா.. ஆட்டம் ஆரம்பமாயிடுச்சுல்ல!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் விருந்தாளியாக நுழைந்துள்ள வனிதா விஜயகுமார் தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இருந்து இரண்டாவது வாரத்திலேயே அதிரடியாக வெளியேற்றப்பட்டார் வனிதா விஜயக்குமார். வனிதா விஜயக்குமார் வெளியேறிய பிறகு நிகழ்ச்சியின் சுவாரசியம் குறைந்தது கண்கூடாக தெரிந்தது.
இந்நிலையில் படுத்த பிக்பாஸை எழுப்ப வனிதாவை மீண்டும் அழைத்து வந்துள்ளார் பிக்பாஸ். இதனால் இனி நிகழ்ச்சி களைகட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி வந்த வேகத்தில் வேலையை ஆரம்பித்திருக்கிறார் வனிதா.

கஸ்தூரி சிக்கினார்
லிவிங் ஏரியாவில் அனைவரையும் உட்கார வைத்து பேசும் வனிதா, எல்லோரையும் ஒரு கை பார்க்கிறார். குறிப்பாக கஸ்தூரியை ஒரு வழியாக்கிவிட்டார்.

ஹீரோ, ஹீரோயின்
கடந்த சனிக்கிழமை எபிசோடில் பிக்பாஸ் வீட்டில் உங்களின் ஹீரோ யார் என்று கஸ்தூரியிடம் கேட்ட கமல்ஹாசன் அந்த நபருக்கு மாலை அணிவிக்குமாறு கூறினார். ஆனால் கஸ்தூரியோ தர்ஷனுக்கு ஷெரின் ஹீரோயின், ஷெரினுக்கு தர்ஷன் ஹீரோ என்றார்.

மாலை மாற்ற சொன்ன கஸ்தூரி
மேலும் இருவரும் மாலையை மாற்றிக்கொள்ளலாம் என்றும் கூறினார் கஸ்தூரி. கஸ்தூரியின் இந்த நடவடிக்கை பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்தது.

மூக்கை உடைத்த வனிதா
இந்நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் விருந்தாளியாக வந்துள்ள வனிதா, இதுதொடர்பாக கஸ்தூரியிடம் நேருக்கு நேராக கேட்டு மூக்கை உடைக்கிறார். உங்களிடம் இருந்து யாருமே இதை எதிர்பார்க்கவில்லை. ஏன் மாலையை மாத்துற அளவுக்கு போனீங்க என்று கேட்கிறார்.

ஆட்டம் ஆரம்பம்
அதற்கு என்ன சொல்வது என்று தெரியாமல் திக்கி திணறுகிறார் கஸ்தூரி. அப்போதே சேரனுக்கும் மதுமிதாவுக்கும் கஸ்தூரி கூறிய விஷயம் பிடிக்கவில்லை என்பது அவர்களின் ரியாக்ஷனில் தெரிந்தது. இந்நிலையில் இன்று அந்த பிரச்சனையை கையிலெடுத்த வனிதா தனது ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டார்.


Click it and Unblock the Notifications











