கமல் தலையில் ஐஸ்பாரையே வைத்த வனிதா: கேர் ஆகி தர்ஷன் மடியில் சாய்ந்த சாண்டி
சென்னை: வனிதா சொன்ன பதிலை கேட்டு சாண்டிக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு பாஸ்.
பிக் பாஸ் 3 வீட்டில் இருந்து இன்று இரவு ஒருவர் வெளியேற்றப்படுவார் என்று முதல் ப்ரொமோ வீடியோவில் கமல் ஹாஸன் தெரிவித்தார். இந்நிலையில் வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரொமோ வீடியோவில் வனிதாவை காட்டியுள்ளனர்.
அந்த வீடியோவில் கமலே வனிதாவை கலாய்த்துள்ளார்.
கமல்
நீங்க எதற்கு வந்தீங்க என்று கமல் ஹாஸன் வனிதாவை பார்த்து கேட்டார். அதுவும் வனிதாவை வத்திக்குச்சி என்றார். அதற்கு வனிதா, ஏதோ ஒரு விதத்தில் மக்கள் என்னை மிஸ் பண்ணினார்கள் என்று தெரிய வந்தது, ஆனால் நான் உங்களை மிஸ் பண்ணினேன் சார் என்று கூறினார். இதை கேட்ட சாண்டி ஆத்தா என்று கூறி தர்ஷன் மடியில் சாய்ந்துவிட்டார். என்ன சாண்டி மறுபடியும் கேர் ஆகிடுச்சா என்று கமல் கேட்ட, சார் தலை லைட்டா கேர் ஆகிடுச்சு என்றார்.

சாண்டி
உங்களை மிஸ் பண்ணினேன் சார் என்று வனிதா கூறியதை பார்த்த பிக் பாஸ் பார்வையாளர்கள் இது உலக மகா நடிப்புடா சாமி என்று தெரிவித்துள்ளனர். அதனால் வனிதாவை கிண்டல் செய்யும் வகையில் சாண்டி நடந்து கொண்டது அவர்களுக்கு தவறாக தெரியவில்லை. ஹவுஸ்மேட்ஸில் சாண்டியாவது வனிதாவை கலாய்க்கிறாரே என்று சந்தோஷம் தான்.

தூபம்
வனிதா திரும்பி வந்தால் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்த்த பார்வையாளர்களே தற்போது அவர் மீது கோபத்தில் உள்ளனர். கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் நடந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் தூபம் போட்டதே வனிதா தான். இந்த வனிதாவால் எப்பொழுதும் நல்லது செய்யவே முடியாது. தயவு செய்து அவரை விரட்டிவிடுங்க பிக் பாஸ் என்று பார்வையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாண்டி
கவின், சாண்டி ஆகியோர் பெண் போட்டியாளர்களை கிண்டல் செய்து ஈவ் டீஸிங் செய்கிறார்கள். அதை கமல் ஹாஸன் ஏன் தட்டிக் கேட்காமல் அவர்களை ஊக்குவிக்கிறார் என்று கேள்வி எழுந்துள்ளது. கமல் சாண்டிக்கு ஆதரவாக பேசுவதாக பல வாரங்களாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. மதுமிதா விஷயத்தில் கமல் ஏன் சாண்டி, கவினை கண்டிக்கவில்லை என்றும் விமர்சிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











