அபிக்கிட்ட காட்டின வேலையை ஷெரின்கிட்டேயும் காட்டிய வனிதா! கடுப்பான தர்ஷன்! எதுல போய் முடிய போதோ?
Recommended Video
சென்னை: பிக்பாஸ் வீட்டில் விருந்தாளியாக நுழைந்துள்ள வனிதா தனது வேலையை ஷெரினிடமும் ஆரம்பித்துவிட்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற வனிதா தனது அடாவடிதனத்தால் மக்களின் பெரும் வெறுப்பை சம்பாதித்தார். இதன் வெளிப்பாடாக இரண்டாவது வாரத்திலேயே பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார் வனிதா.
அவர் இருந்த வரை எப்போது வனிதா நாமினேஷனுக்கு வருவார் வெளியேற்றலாம் என கேட்டுக்கொண்டிருந்தனர் மக்கள். ஆனால் அவர் போன பிறகு போரடிக்கிறது அவரை மீண்டும் கொண்டு வாருங்கள் என்றனர்.

வனிதா வைல்டு கார்டு
இது மட்டும் பிக்பாஸ்க்கு கேட்டுவிட்டது போல. ஸ்கெட்ச் போட்டு வனிதாவை விருந்தாளி என உள்ளே அழைத்து வந்த பிக்பாஸ் பின்னர் அவரை வைல்டு கார்டு என அறிவித்தார். வெளியே போன வனிதா தன்னை கழுவி ஊற்றியதை கவனித்தாரா தன்னை பற்றின மீம்ஸ்களை பார்த்தாரா இல்லையா என்று தெரியவில்லை.

சண்டை மூட்டி விடுகிறார்
ஏனெனில் பார்த்ததற்கான எந்த அறிகுறியும் வனிதாவிடம் தெரியவில்லை. கடந்த முறை இருந்ததை விட இம்முறை மிக மோசமாக நடந்துகொள்கிறார். சண்டை மூட்டி விடுவதையும் சண்டை போடுவதையும் மட்டுமே பெரும் வேலையாக வைத்துள்ளார்.

வேட்டு வைத்த வனிதா
வந்த கையோடு அபிராமி முகென் மீது கொண்ட ஒரு தலை காதலுக்கு வேட்டு வைத்தார். முகென் மீது பைத்தியமாக இருந்த அபிக்கு தூபம் போட்டு ஒரே இரவில் முகெனுக்கு எதிராக மாற்றிவிட்டார்.

ஷெரினிடம் ஆரம்பித்த வனிதா
அதுமட்டுமின்றி முகெனும் அபியும் அடிதடி வரை செல்லும் அளவுக்கு வைத்து விட்டார் வனிதா. இந்நிலையில் அபிராமியிடம் செய்த அதே வேலையை தற்போது ஷெரினிடம் தொடங்கியிருக்கிறார் வனிதா.

ஏற்றிவிடும் வனிதா
ஷெரினை தர்ஷனிடம் இருந்து விலகி இருக்கும்படி அவருக்கும் தூபம் போடுகிறார் வனிதா. ஒரே பெட்டில் ஷெரினுடன் படுத்துக்கொண்டு அவருக்கு ஆறுதல் சொல்வது போல் தர்ஷன் குறித்து ஏற்றிவிடுகிறார்.

வத்திக்குச்சி
ஏற்கனவே ஷெரின் வனிதாவுடன் நெருக்கமாக இருப்பதை தர்ஷன் விரும்பவில்லை. வனிதா ஒரு வத்திக்குச்சி, கொளுத்தி போடுவார் என்பது தர்ஷனுக்கு நன்றாகவே தெரியும். இதனால் ஷெரின் வனிதாவுடன் நெருக்கமாக இருப்பதை தர்ஷன் கொஞ்சமும் விரும்பவில்லை, வனிதா ஷெரினுடன் பேசும் போது உற்று கவனித்து வருகிறார்.

அழும் ஷெரின்
அவர்களுக்குள் விளையாட்டாக நடக்கும் சண்டையை கூட பெரிது படுத்துகிறார் வனிதா. இதனால் சண்டையின் போது கூட சாதாரணமாக இருக்கும் ஷெரின் வனிதா ஆறுதல் கூறும் போது அழுதுவிடுகிறார்.

எங்கு போய் முடியபோகுதோ?
இப்படிதான் அபிராமி முகென் பிரச்சனையை காரணமாக வைத்து பிரச்சனையை கிளப்பி அபிராமி மற்றும் மதுமிதாவை வெளியேற்றினார். இப்போது அதே ஆயுதத்தை ஷெரின் தர்ஷனிடம் எடுத்துள்ளார் வனிதா இது எங்கு போய் முடியபோகுதோ என்ற பரபரப்பு இப்போதே தொற்றிக்கொண்டது.


Click it and Unblock the Notifications











