மதுமிதாவுக்கு யாரும் வாக்களிக்கக்கூடாது என்பதற்காகவே வனிதா அந்த பிரச்சனையை மீண்டும் கிளறுகிறார்?

Recommended Video

Bigg Boss 3 Tamil: Day 8: Promo 2: மதுமிதா புலம்பி மக்களை கவருகிறாரா?-வீடியோ

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் மதுமிதா தமிழ்பெண் என்று கூறியதை மீண்டும் கிளறி பிரச்சனையை பெரிது படுத்துகிறார் வனிதா விஜயக்குமார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா விஜயக்குமார் பங்கேற்கிறார் என்ற செய்தி வந்தவுடனே நெட்டிசன்கள் நிச்சயம் என்டெர்டெய்ன்மென்ட் இருக்கு என்றனர். அதைபோலவே முதல் நாளில் இருந்தே பிரச்சனையை தொடங்கிவிட்டார் வனிதா.

அதுவும் பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக ஆனது முதல் வனிதாவின் அலப்பறைகளுக்கு அளவே இல்லாமல் இருந்தது. கேப்டன் போல் இல்லாமல் குரூப் ஃபார்ம் செய்து கொண்டு ஒன்றும் இல்லாத விஷயங்களை ஊதி பெரிதாக்கினார்.

குரூப் சேர்ந்து சண்டை

குரூப் சேர்ந்து சண்டை

குறிப்பாக மீரா மிதுனை பாடாய் படுத்தினார். எப்போது கத்தி கத்தி பேசும் வனிதா, அபிராமி, சாக்ஷி, ஷெரின் ஆகியோருடன் சேர்ந்து கொண்டு மீராவை வீட்டை விட்டு வெளியே போ என்றார்.

ஒரு சார்பு

ஒரு சார்பு

அதுமட்டுமா அபிராமியே அமைதியாக இருந்தபோது கூட நான் கேட்கிறேன் வா என அழைத்து வந்து மீராவிடம் வெட்டி சண்டை போட்டார். எல்லா விஷயத்திலும் மீராவை ஒரு சார்பாகவே நடத்தி வந்தார் வனிதா.

மதுமிதாவுக்கு எதிராக

மதுமிதாவுக்கு எதிராக

அடுத்தபடியாக தற்போது மதுவை கார்னர் செய்துள்ளார் வனிதா. மதுமிதா, அபிராமிக்காக நல்லது சொல்ல போய் அது தமிழ் பெண் என்ற வார்த்தையில் வந்து முடிந்தது. அதனை பிடித்துக்கொண்ட வனிதா, உனக்கு முன்பு பிறந்த தமிழ்பெண் நான் எனக்கூறி மதுமிதாவுக்கு எதிராக எல்லோரையும் திருப்பி சண்டைபோடச் செய்தார்.

தனிமைப்படுத்தப்பட்ட மதுமிதா

தனிமைப்படுத்தப்பட்ட மதுமிதா

இந்த பிரச்சனையில் சேரன் மத்திசம் செய்ய, தவறு என அன்றே ஷெரினிடம் மன்னிப்பு கேட்டார் மதுமிதா. இருந்தபோதும் அவரை பிக்பாஸ் விட்டில் தனிமைப்படுத்திவிட்டனர். இதனால் தனியாக பேசும் நிலைமைக்கு வந்துவிட்டார் மதுமிதா.

மதுவை கண்டமேனிக்கு பேசும் வனிதா

மதுவை கண்டமேனிக்கு பேசும் வனிதா

இந்நிலையில் இன்றைய புரமோவில் அந்த பிரச்சனையை கிளறி மதுமிதாவை கடுமையாக பேசுகிறார் வனிதா. தேவையில்லாமல் மதுமிதாவை ஊம குசும்பி என்றும் தாலியை கழட்டி வச்சுட்டு வந்துட்டு நீ கலாச்சாரத்தை பேசுகிறாயா? அபிராமியை தவறு என்கிறாயா என வழக்கம்போல கத்துகிறார்.

ஷட் அப்

ஷட் அப்

இதைத்தொடர்ந்து அபிராமி ஓவரா பண்றாருன்னு நீங்க சொல்லலையா, இந்த வாய் தானே சொன்னது என்று வனிதாவை திருப்பி கேட்கிறார் மதுமிதா. அதற்கு ஷட் அப் என்று கூறிவிட்டு மதுமிதாவை அப்படி ஒருபார்வை பார்க்கிறார் வனிதா.

என்னா ஒரு வில்லத்தனம்!

என்னா ஒரு வில்லத்தனம்!

மதுமிதா எவிக்ஷன் லிஸ்டில் உள்ளார். மக்கள் அவருக்கு வாக்களித்தால் மட்டுமே அவரால் பிக்பாஸ் வீட்டில் நீடிக்க முடியும். இந்நிலையில் முடிந்து போன பிரச்சனையை கிளப்பி மதுமிதாவின் பெயரை டேமெஜ் செய்யப்பார்க்கிறார் வனிதா.. என்னா ஒரு வில்லத்தனம்..!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X