உங்கக்கூட நடிக்கனும்.. சான்ஸ் கிடைக்குமா.. அவார்டு வாங்கிய கையோடு கமலை திணறடித்த வனிதா!

Recommended Video

Bigg Boss Awards: கவினுக்கு கிடைத்த Award

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிரான்ட் பினாலேவில் கமலிடம் தில்லாக நடிக்க வாய்ப்பு கேட்டார் நடிகை வனிதா.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் முக்கிய போட்டியாளர் வனிதா. வனிதா இல்லாமல் இருந்திருந்தால் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இந்தளவுக்கு சுவாரசியமாக போயிருக்காது என்பது மறுக்க முடியாத உண்மை.

வனிதா இருந்த வரை பிக்பாஸ் வீடு சண்டையும் சச்சரவுமாக போர்க்களம் போல் காட்சியளித்தது. பிக்பாஸ் வீட்டில் வனிதா செய்த அட்டகாசங்களை பொறுக்க முடியாத மக்கள் அவரை சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றினர்.

வெளியேற்றம்

வெளியேற்றம்

வனிதாவை எப்படியாவது பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து முதல் முறையாக நாமினேஷனுக்கு வந்த வனிதாவை சொல்லி வைத்தது போல் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றினர்.

அக்கா வேண்டும்

அக்கா வேண்டும்

என்னதான் வனிதா சண்டக் கோழியாக இருந்தாலும் அவர் இல்லாத சில வாரங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி எந்த சுவாரசியமும் இல்லாமல் படுத்தே விட்டது. இதனால் வனிதா அக்காவை அழைத்து வாருங்கள் என்று மக்களே கெஞ்சும் அளவுக்கு நிலைமை ஆகிவிட்டது.

வைல்டு கார்டு என்ட்ரி

வைல்டு கார்டு என்ட்ரி

சிலர் வனிதாவை மீண்டும் அழைத்து வர எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் டிஆர்பியை கருத்தில் கொண்ட பிக்பாஸ் மக்களின் எதிர்ப்பையும் மீறி வனிதாவை வைல்டு கார்டு என்ட்ரியாக்கினார்.

வனிதாவுக்கு கட்ஸி விருது

வனிதாவுக்கு கட்ஸி விருது

இந்நிலையில் இன்று ஒளிபரப்பான பினாலே நிகழ்ச்சியில் வனிதாவுக்கு கட்ஸி அதாவது, துணிச்சல் மிக்கவள் என்ற விருது வழங்கப்பட்டது. இதனை பெற்ற வனிதா, தானும் ஒரு ஸ்ட்ரேட்டஜியுடன் விளையாடியதாக கூறினார். மேலும் தன்னுடைய டார்கெட் நீங்கள்தான் என கமலை கைக்காட்டினார் கமல்.

மகள்களிடம் விருது

மகள்களிடம் விருது

இதனால் ஒரு நிமிடம் மிரண்டு போனார் கமல். தொடர்ந்து பேசிய வனிதா இன்றுதான் பினாலே நடைபெறும் என நான் கணக்கு போட்டு வைத்திருந்தேன். இன்று என்னுடைய பிறந்தநாள். இந்த நன்னாளில் உங்கள் கையால் இப்படி ஒரு விருதை பெற்றுள்ளேன் என்று கூறினார். மேலும் தனது மகள்களின் கையில் இந்த விருதை கொடுக்குமாறு கூறினார். அதனை தொடர்ந்து வனிதாவின் மகள்களிடம் அந்த விருதை வழங்கினார் கமல்.

சான்ஸ் கேட்ட வனிதா

சான்ஸ் கேட்ட வனிதா

இதைத்தொடர்ந்து பேசிய வனிதா, விருதை கொடுத்து அனுப்பிவிட்டேன் பாப்பாவுக்கு பர்த்டே கிஃப்ட் வேண்டும். உங்க படத்துல நடிக்க சான்ஸ் கிடைக்குமா என தடாலடியாக கேட்டார். உங்க படத்தில் நடிக்க எனக்கு சான்ஸ் கிடைத்தால் போதும், எல்லாம் முடித்த திருப்தி ஏற்பட்டுவிடும் என கமலுடன் படத்தில் நடிக்க அந்த மேடையிலேயே சான்ஸ் கேட்டு திணறடித்தார் வனிதா.

நேற்று பிறந்த நாள்

நேற்று பிறந்த நாள்

இன்று ஒளிபரப்பாகும் பிக்பாஸ் கிரான்ட் பினாலே நிகழ்ச்சி நேற்றே காட்சியாக்கப்பட்டுவிட்டது. வனிதாவுக்கு நேற்று பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X