நெற்றியில் கொடுப்பது புனிதமான முத்தம்.. பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரஞ்சித் செயலுக்கு நியாயம் சொன்ன வனிதா
சென்னை: பிக் பாஸ் தமிழ் 8 நிகழ்ச்சி கடந்த 6ம் தேதி பிரம்மாண்டமான துவக்க விழாவுடன் தன்னுடைய துவக்கத்தை துவங்கிய நிலையில் இன்றைய தினம் 5வது நாளில் என்ட்ரி கொடுத்து சிறப்பாக நடந்து வருகிறது. பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்கும் அடுத்தடுத்த டாஸ்க்களை பிக்பாஸ் கொடுத்து வருகிறார். இந்த டாஸ்க்குகுகளில் அதிகமாக வெற்றி பெற்று பெண்கள் ஸ்கோர் செய்வதையடுத்து தங்கள் பங்கிற்கு ஆண்களும் அடுத்தடுத்த விஷயங்களை திட்டமிட்டு செயல்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஃபேட்மேன் மற்றும் ரஞ்சித்திற்கு இடையில் நடைபெற்ற சண்டை பிராங்க் என்பது தெரிய வந்த நிலையில் ஜாக்குலின் மற்றும் சௌந்தர்யா உள்ளிட்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதை எடுத்து அவர்களை சமாதானப்படுத்தும் வகையில் ரஞ்சித் சௌந்தர்யா நெற்றியில் முத்தமிட்டதையும் ஜாக்குலின் கன்னத்தை கிள்ளிவிட்டு சென்றதையும் பார்க்க முடிந்தது.

பிக்பாஸ் தமிழ் 8 ஷோ: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 6ம் தேதி பிரம்மாண்டமான துவக்க விழாவுடன் துவங்கிய நிலையில் தொடர்ந்து 5வது நாளாக இன்றும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 24 மணி நேரத்திலேயே முதல் எவிக்ஷனாக நடிகை சாச்சனா வெளியேறிய நிலையில் அவருக்கு மீண்டும் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே தற்போது நிகழ்ச்சியின் சென்டர் ஆஃப் அட்ராக்ஷனாக சவுந்தர்யா, ஜாக்குலின் மற்றும் சுனிதா ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வரும் நிலையில் இவர்களுக்கு தனித்தனியாக டாஸ்க்க்களை பிக் பாஸ் கொடுத்து வருகிறார்.
முத்தம் கொடுத்த ரஞ்சித்: அந்த வகையில் பெண்கள் குழுவினரே அதிகமாக இந்த டாஸ்க்குகளில் ஸ்கோர் செய்து வருவதால் தங்களது இருப்பை வெளிப்படுத்தும் வகையில் ஆண்களும் அடுத்தடுத்து திட்டமிட்டு காய் நகர்த்தி வருகின்றனர். அந்த வகையில் ரஞ்சித் மற்றும் ஃபேட்மேன் உள்ளிட்டவர்களுக்கு இடையில் மிகப்பெரிய அளவில் ஏற்பட்ட சண்டையை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஜாக்குலின், சவுந்தர்யா உள்ளிட்டவர்கள் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் அவர்கள் பிராங்க் செய்தது குறித்து தெரிய வந்த நிலையில் ஜாக்குலின் அழுததையும் பார்க்க முடிந்தது. இதனிடையே சௌந்தர்யா நெற்றியில் முத்தம் கொடுத்த ரஞ்சித், தொடர்ந்து ஜாக்குலின் கன்னத்தையும் கிள்ளிவிட்டு சென்றார்.
வனிதா விஜயகுமார் விளக்கம்: அவர்களை சமாதானப்படுத்தும்வகையில் ரஞ்சித் இவ்வாறு நடந்துக் கொண்ட நிலையில், இதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. ரஞ்சித்தின் இந்த செயல் பல்வேறு விமர்சனங்களை எழுப்பி வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தற்போது பேசியுள்ள நடிகை வனிதா விஜயகுமார், மிகப்பெரிய நடிகர் மற்றும் இயக்குநராக தொடர்ந்து பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ரஞ்சித், இது போன்ற ஒரு நிகழ்ச்சியில் கேவலமான எண்ணத்துடன் நடந்து கொண்டிருக்க மாட்டார் என்று கூறியுள்ளார். நெற்றியில் முத்தம் கொடுப்பது புனிதமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நெற்றியில் கொடுக்கும் முத்தம்: நெற்றியில் கொடுக்கும் முத்தம் மிகவும் அழகானது என்றும் அதை ஒரு பெண்ணின் சகோதரன், அப்பா போன்றவர்கள் கொடுக்கலாம் என்றும் வனிதா விஜயகுமார் கூறியுள்ளார். அது கண்டிப்பாக தவறான கிஸ்ஸாக இருக்க முடியாது என்றும் அது பார்ப்பவர்களின் கண்ணோட்டத்தில்தான் இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஒரு பெண்ணிற்கு இந்த விஷயம் பிடிக்காத பட்சத்தில் அவரது குடும்பத்தினர் புரிந்துக் கொள்ள மாட்டார்கள் என்னும்பட்சத்தில் அந்தப் பெண் அதை மறுக்கலாம் என்றும் வனிதா விஜயகுமார் மேலும் கூறியுள்ளார். இதனிடையே ரஞ்சித் சௌந்தர்யாவிற்கு கொடுத்தது அப்பா ஸ்தானத்தில் கொடுத்த முத்தமா அல்லது காதல் முத்தமா என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











