அட போங்க பாஸ்.. இப்போ போய் இப்படி பண்ணீட்டிங்களே.. பிக்பாஸ் வீட்டிலிருந்து எவிக்டானது இவர்தான்!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Vanitha Eliminated this week

சென்னை: பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் யார் வெளியேறியது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் 15 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் வனிதா விஜயகுமார். பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த இரண்டு நாட்கள் அமைதியாக இருந்தார்.

பின்னர் பிக்பாஸ் வீட்டின் ஓனரே தான்தான் என்பது போல அதிகாரம் செய்தார். பின்னால் பேசுவது, ஒன்றை ஒன்பதாக்குவது, கொளுத்தி போடுவது சண்டை மூட்டி விடுவது என தன்பாட்டுக்கு புகுந்து விளையாடினார்.

வனிதாவுக்கு பெயர்

வனிதாவுக்கு பெயர்

இதனால் கடுப்பான மக்கள், சமூக வலைதளங்களில் வனிதாவை திட்டி தீர்த்தனர். சண்டக்கோழி, பஜாரி என்றும் பட்டப்பெயர் வைத்து கோபத்தை வெளிப்படுத்தினர்.

இரண்டாவது போட்டியாளர்

இரண்டாவது போட்டியாளர்

மேலும் தயவு செய்து பிக்பாஸ் வீட்டிலிருந்து வனிதாவை வெளியேற்றுங்கள் என கோரிக்கை விடுத்து வந்தனர். இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற எவிக்ஷனில் பிக்பாஸ் வீட்டில் இருந்து இரண்டாவது போட்டியாளராக வெளியேற்றப்பட்டார்.

படுத்த டிஆர்பி

படுத்த டிஆர்பி

ஆனால் வனிதா போன பிறகு நிகழ்ச்சியின் சுவாரசியம் குறைந்துவிட்டது. சண்டை, சச்சரவு ஏதும் இல்லாமல் பிக்பாஸ் வீடு அமைதியாக இருந்தது. இதன் காரணமாக டிஆர்பி படுத்துவிட்டது.

வைல்டு கார்டு என்ட்ரி

வைல்டு கார்டு என்ட்ரி

இப்படியே விட்டால் வேலைக்காவது என்று எண்ணிய பிக்பாஸ், ஹோட்டல் டாஸ்க்கை காரணம் காட்டி அடுத்த சில வாரங்களிலேயே வனிதாவை விருந்தாளியாக அழைத்து வந்தார். பின்னர் வனிதாவை வைல்டு கார்டு என்ட்ரி என கூறினார்.

களைகட்டிய பிக்பாஸ் வீடு

களைகட்டிய பிக்பாஸ் வீடு

பிக்பாஸ் எதிர்பார்த்தப்படியே வனிதா மீண்டும் பிக்பாஸின் டிஆர்பியை எகிற வைத்தார். பிக்பாஸ் வீட்டில் அவர் போட்ட தூபத்தால் அடிதடி, தற்கொலை முயற்சி என களைகட்டியது.

பிக்பாஸிடம் எகிறிய வனிதா

பிக்பாஸிடம் எகிறிய வனிதா

இந்நிலையில் கடந்த வாரம் சேரன், எவிக்ட்டானதாக அறிவிக்கப்பட்டது. இதனால் மனமுடைந்த வனிதா, நானும் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுகிறேன், இந்த நிகழ்ச்சி எதை நோக்கி செல்கிறது என்று பிக்பாஸையே கேள்வி கேட்டார்.

வான்ட்டடாக நாமினேஷன்

வான்ட்டடாக நாமினேஷன்

ஆனால் சேரன் சீக்ரெட் ரூமில் இருந்ததை அறியாத வனிதா, பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற எண்ணினார். இதற்காக கேப்டன் டாஸ்க்கையும் விட்டுக்கொடுத்து வான்ட்டடாக நாமினேஷனுக்கு சென்றார்.

வனிதா எவிக்ட்டடு

வனிதா எவிக்ட்டடு

கடந்த வாரம் நடந்த பல பிரச்சனைகளுக்கு வனிதாதான் காரணமாக இருந்தார் என்பதால் மொத்த ஹவுஸ்மேட்ஸும் அவரை நாமினேட் செய்தனர். இந்நிலையில் இன்றைக்கான எபிசோடும் ஒரு நாள் முன்னதாக நேற்றே ஷுட் செய்யப்பட்ட நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வனிதா எவிக்ட் செய்யப்பட்ட தகவல் கிடைத்துள்ளது.

சிறந்த போட்டியாளர்

சிறந்த போட்டியாளர்

இந்த வாரம் தான் வனிதா அமைதியாகவும் மற்றவர்களுக்கு நல்ல மாதிரியான அட்வைஸ்களையும் கொடுத்து தனக்குள் இருக்கும் இன்னொரு முகத்தையும் காட்டினார். மக்கள் மத்தியில் வனிதா ஒரு சிறந்த போட்டியாளர் என்ற பெயர் வரும் போது அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

பொய்யாய் போன எதிர்பார்ப்பு

பொய்யாய் போன எதிர்பார்ப்பு

கடந்த வார நிகழ்ச்சியின் போது கவினை இந்த வாரம் காப்பாற்றலாமா அல்லது அடுத்த வாரம் காப்பாற்றலாமா என கேட்டார் கமல். பின்னர் அவரே மக்களை பார்த்து மவுனம் சம்மதம் எனக்கூறி இந்த வாரம் காப்பாற்றி விடுவோம் அடுத்த வாரம் அனுப்பிவிடுவோம் என்றார். இதனால் இந்த வாரம் கவின் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்த்திருந்தனர் மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X