ஷூட்டிங்கா முக்கியம்.. நமக்கு அதுதான் முதல்ல.. மகளுக்கு சூப்பர் பாடம் எடுத்த வனிதா விஜயகுமார்!

சென்னை: தண்டுபாளையம் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்காக சென்னை வந்த வனிதா விஜயகுமார் மீண்டும் தனது மகளுடன் தாய்லாந்து சென்றுள்ளார். அங்கே இருவரும் ஹோட்டல் ஒன்றில் சாப்பிடும் வீடியோவை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வனிதா விஜயகுமார் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் வனிதா பேசியிருப்பதற்கு ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா விஜயகுமார் குடும்பத்துடன் ஏற்பட்ட சண்டை காரணமான தனியாக தனது மகள் ஜோவிகாவுடன் வாழ்ந்து வருகிறார். 3வதாக திருமணம் செய்து கொண்ட பீட்டர் பாலையும் வனிதா விவாகரத்து செய்து விட்டார். உடல்நலக் குறைவால் அவரும் உயிரிழந்த நிலையில், வனிதா தனது மகளின் எதிர்காலத்துக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்.

Vanitha Vijayakumar fun with her daughter Jovika at Hotel video goes trending

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு 25 படங்களில் நடித்து விட்டேன் என சமீபத்தில் தண்டுபாளையம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசும் போது கூறியிருந்தார். அதில், சில படங்கள் வெளியாகி உள்ளதாகவும் சில படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளதாகவும் கூறினார்.

தாய்லாந்தில் படப்பிடிப்பு: தண்டுபாளையம் படத்தில் சோனியா அகர்வால் உடன் இணைந்து வனிதா விஜயகுமார் நடித்துள்ளார். அந்த படம் விரைவில் வெளியாக காத்திருக்கிறது. சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க வந்த வனிதா விஜயகுமார் தாய்லாந்தில் படப்பிடிப்பில் இருப்பதாகவும் விரைவில் அதுதொடர்பான அறிவிப்பை வெளியிடுவேன் என்றும் கூறினார்.

பார்த்திபன் படத்தில் ஜோவிகா: பார்த்திபன் இயக்கத்தில் அடுத்து வெளியாகவுள்ள டீன்ஸ் படத்தில் ஜோவிகா ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார். அந்த படத்தில் உதவி இயக்குநராகவும் பணியாற்றிய ஜோவிகா தொடர்ந்து சினிமாவில் நடிகையாக வலம் வர பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி: கடந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா போட்டியாளராக பங்கேற்றார். ஆரம்பத்தில் ஜோவிகாவின் பேச்சுக்கு பலரும் ஃபயர் விட்டு விசித்ராவை விளாசி வந்தனர். ஆனால், பிரதீப் ஆண்டனிக்கு எதிராக திமிராக ஜோவிகா பேச ஆரம்பித்த நிலையில், ஜோவிகாவை அதிகம் ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். பிரதீப் ஆண்டனி ரசிகர் ஒருவர் தன்னை தாக்கி விட்டதாகவும் வனிதா தெரிவித்தது பரபரப்பை கிளப்பியது.

சோறு தான் முக்கியம்: ஹோட்டலில் அம்மா வனிதா விஜயகுமாருடன் அமர்ந்து கொண்டு இருக்கும் ஜோவிகா அம்மா ஷூட்டிங் இருக்குமா? என அவசரப்படுத்த, ஷூட்டிங்கை விட நமக்கு சோறு தான் முக்கியம் என நான்வெஜ் ஐட்டத்தை வெளுத்துக் கட்டும் வீடியோவை வனிதா விஜயகுமார் வெளியிட்டுள்ளார். உணவு பிரியையான வனிதா கடைசியாக குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியிலும் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். தனது மகளுக்கு சூப்பரான பாடத்தை வனிதா கற்று தருகிறார் என பலரும் கமெண்ட் போட்டு கிண்டல் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X