உன் திருமண வாழ்க்கை நீடிக்குமான்னு தெரியாது.. புதுப்பெண் மதுமிதா மீது விஷத்தை கக்கிய வனிதா!

Recommended Video

Bigg Boss 3 Tamil: Day 9 : Promo 1: Madhumitha Vs Vanitha : தொடரும் அபியின் குழந்தை பிரச்சனை-வீடியோ

சென்னை: புதிதாக திருமணமான மதுமிதாவை உன் திருமண வாழ்க்கை நீடிக்குமான்னு தெரியாது என்று ஏற்கனவே கூறிய வனிதா இன்று அவரது தாலியை பஞ்சாயத்துக்கு இழுத்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள வனிதா விஜயக்குமார் நாள்தோறும் ஒரு பிரச்சனையை இழுத்துவிட்டு வருகிறார். ஏற்கனவே தந்தையுடன் தகராறு, சகோதரனுடன் தகராறு, கணவருடன் தகராறு, செய்தியாளர்களுடன் தகாராறு என அவர் சண்டை போடாத ஆட்கள் இல்லை.

கணவரை விவாகரத்து செய்த வனிதா விஜயக்குமார் அவரது மகனை தன்னுடன் வைத்துக்கொள்ள பெரும் முயற்சி செய்தார். ஆனால் அவரது மகனோ, அப்பாவுடன் தான் இருப்பேன் என சென்றுவிட்டார்.

சண்டை நிச்சயம்

சண்டை நிச்சயம்

இதைத்தொடர்ந்துதான் குடும்பத்தாருடன் சண்டைபோட்டு வருகிறார் வனிதா. இந்நிலையில் தான் பிக்பாஸ் போட்டியில் பங்கேற்றார் வனிதா. அவர் பிக்பாஸ் விட்டில் நுழைந்தவுடனே சண்டை நிச்சயம் என பேச தொடங்கினர் நெட்டிசன்கள்.

ஆர்டர் போடும் வனிதா

ஆர்டர் போடும் வனிதா

நெட்டிசன்களின் கணிப்பு படியே வந்த நாள் முதல் ஏழரையை கூட்டி வருகிறார். எப்போதும் கத்தி கத்தி பேசும் வனிதா, தான் சீனியர் என்ற மனோநிலையில் எல்லாருக்கும் ஆர்டர்போட்டு வருகிறார்.

மது திருமண வாழ்க்கை

மது திருமண வாழ்க்கை

ஒன்றுமே இல்லாத தமிழ் பெண் பிரச்சனையை எவிக்ஷன் வரை கொண்டுவந்து விட்டவர் வனிதா. மேலும் மதுமிதாவின் திருமண வாழ்க்கை குறித்து நெகட்டிவாக பேசுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார் வனிதா.

சாபம் விடாத குறையாக

சாபம் விடாத குறையாக

நேற்று முன்தினம் தமிழ் பெண் பிரச்சனை வந்த போதே சந்தோடு சந்தாக மதுமிதாவிடம் உனக்கு நல்ல திருமண வாழ்க்கை கிடைத்துள்ளது. எல்லோருக்கும் அப்படி கிடைக்கவில்லை. உன் திருமண வாழ்க்கை எதிர்காலத்தில் ஸ்பாயில் ஆகாது என்று யாராலும் சொல்ல முடியாது என சாபம் விடாத குறையாக பேசினார் வனிதா.

வேட்டு வைக்கும் வகையில்

வேட்டு வைக்கும் வகையில்

இந்நிலையில் இன்று அவரது தாலி குறித்து பேசி எரிச்சலை கிளப்பியுள்ளார். திருமணமான கையோடு பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளார் மதுமிதா. வந்ததம் வராததுமாக அவரது கல்யாண வாழ்க்கைக்கு வேட்டு வைக்கும் விதத்திலேயே பேசி வருகிறார் வனிதா என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X