ஒன்னுக்கொன்னு சளைச்சது இல்லை.. குக் வித் கோமாளி சீசன் 5க்கும் வந்த வனிதா விஜயகுமார்.. குரேஷி செம!

சென்னை: பிக் பாஸ் பிரபலங்கள் குக் வித் கோமாளிக்கு வருவதும் குக் வித் கோமாளி பிரபலங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதும் பழகிய டெம்பிளேட்டாகவே மாறிவிட்டது. அதே போல விஜய் டிவியின் எந்தவொரு ரியாலிட்டி ஷோவானாலும் வனிதா விஜயகுமார் வருவதும் அதே ஸ்டைல் டெம்பிளேட்டாக மாறியுள்ளது.

குக் வித் கோமாளி சீசன் 5 ஏப்ரல் 27ம் தேதி முதல் விஜய் டிவியில் பிரம்மாண்ட துவக்க விழா நிகழ்ச்சியுடன் ஆரம்பமாகிறது. இந்த சீசனில் குக்காக போட்டியிடும் நபர்களும், அவர்களுக்கு தொல்லை கொடுக்கும் கோமாளிகளும் என அனைத்து பட்டியலும் வெளியாகி விட்டன.

Vanitha Vijayakumar joins Cook with Comali season 5 as a guest

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த பிரியங்கா தேஷ்பாண்டே பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து குக் வித் கோமாளி சீசனையும் தூக்கி நிறுத்த இந்த சீசனில் குக்காக களமிறங்குகிறார். இந்நிலையில், சிறப்பு விருந்தினராக வனிதா விஜயகுமாரும் உள்ளே என்ட்ரி கொடுத்த புதிய புரோமோ வெளியாகி இருக்கிறது.

குக் வித் கோமாளியில் வனிதா விஜயகுமார்: ஏற்கனவே வனிதா விஜயகுமார் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு கலக்கியுள்ளார். இந்நிலையில் அவரும் நடிகை வித்யூலேகாவும் சிறப்பு விருந்தினர்களாக குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியின் முதல் எபிசோடிலேயே செட்டுக்குள் நுழைந்த காட்சிகள் வெளியாகி உள்ளன.

குரேஷி செம கலாய்: "ஒன்னுக்கொன்னு சளைச்சது இல்லை.. ரெண்டும் மோதி பொழச்சது இல்லையே" என வனிதா விஜயகுமார் மற்றும் வித்யூலேகா உள்ளே வரும் போது குரேஷி அடித்த கவுன்ட்டரை பார்த்து ரசிகர்கள் சிரித்து கமெண்டுகளை போட்டு வருகின்றனர். கடந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சி சொதப்பியது போல இந்த சீசன் குக் வித் கோமாளி நிகழ்ச்சி சொதப்பாது என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரியங்கா இருக்காரே: பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற பிரியங்கா தேஷ்பாண்டே இந்த முறை குக் வித் கோமாளி சீசன் 5ல் வாண்டட்டாக வந்து பங்கேற்றுள்ளார். செஃப் தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் நடுவர்களாக உள்ள இந்த நிகழ்ச்சியில் சுஜிதா, பிரியங்கா இடையே டஃப் காம்பெடிஷன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெஸ்லா குயின்: ப்ளூ ஸ்டார் படத்தில் பாண்டிராஜன் மகன் ப்ரித்திவிராஜுக்கு ஜோடியாக நடித்த நடிகை திவ்யா துரைசாமி அடுத்தடுத்து சினிமாவில் பிசியான நடிகையாம மாறுவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு குக் வித் கோமாளி சீசன் 5ல் போட்டியாளராக வந்திருப்பதை பார்த்து ஹேப்பியாகி விட்டனர். டெஸ்லா குயினை வார வாரம் இனி பார்த்து ரசிக்கலாமே என கமெண்ட் போட்டு வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் இடுப்பழகை காட்டுவாரா? அல்லது மொத்தமாக மூடி மறைத்து விடுவாரா என்றும் கமெண்ட்டுகள் பறக்கின்றன.

போட்டியாளர்கள் லிஸ்ட்: சுஜிதா, பிரியங்கா, திவ்யா துரைசாமி, விடிவி கணேஷ், ஸ்ரீகாந்த் தேவா, இர்ஃபான், அக்‌ஷய் கமல், பூஜா வெங்கட், வசந்த் வாசி மற்றும் ஷாலினி ஜோயா உள்ளிட்ட போட்டியாளர்கள் இந்த சீசனில் குக்காக களமிறங்குகின்றனர். கோமாளிகளாக ரசிகர்களை சிரிக்க வைக்க புகழ், குரேஷி, மணிமேகலை, ராமர், சுனிதா, வினோத், நாஞ்சில் விஜயன், ஷப்னம், அன்ஷிதா, கேமி என ஏகப்பட்ட பேர் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X