ரோஜாக்கு தகுதியே இல்ல.. செஃப் தாமுக்கு அடுத்த நான் தான்.. குக் வித் கோமாளி பற்றி வனிதா பேட்டி
சென்னை: சினிமாவாக இருந்தாலும் அரசியலாக இருந்தாலும், எந்த விஷயமாக இருந்தாலும் துணிச்சலாகவும், தைரியமாகவும் தனது கருத்துகளை வெளிப்படையாக பேசக்கூடிய நடிகையாக இருப்பவர் நடிகை வனிதா விஜயகுமார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர், பேசும் பல விஷயங்களும் இணையத்தில் வைரலாகும். அதனால் ரசிகர்கள் இவருக்கு "வைரல் ஸ்டார்" என்ற பட்டத்தையும் வழங்கியுள்ளனர். தற்போது வனிதா Cooku with Comali நிகழ்ச்சி குறித்தும், ரோஜா குறித்து சொன்ன விஷயம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரோஜாவிற்கு தகுதி இல்லை: நடிகை ரோஜா ரெட் பூல் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று இருக்கிறேன். அந்த நிகழ்ச்சியில் நடுவராக அமர்வதற்கான அனைத்து தகுதிகளும் எனக்கு இருக்கிறது. ஆனால், எந்த தகுதியும் இல்லாத ரோஜாவை ஏன் நடுவராக்கினார்கள் என்று தெரியவில்லை. ரோஜா எனக்கு நண்பர் தான் இருந்தாலும் அவருக்கு நடுவராக இருக்க தகுதி இல்லை. செஃப் தாமுவுக்கு அடுத்தபடியாக அந்த இருக்கையில் அமர தகுதியானவர் நான் தான். இந்த விஷயம் செஃப் தாமுவுக்கே நன்றாக தெரியும். இதுகுறித்து விஜய் டிவியில் சம்பந்தப்பட்ட ஒருவரிடம் கேட்டபோது, இதற்கும் எனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை அக்கா, என்னை மன்னித்துவிடுங்கள் என்றார்.

எனக்கு தான் தகுதி இருக்கு: தொடர்ந்து நிகழ்ச்சி குறித்து பேசிய வனிதா, குக் வித் கோமாளியில் முன்பு இருந்த சுவாரஸ்யம் இப்போது இல்லை. எதற்காக ஜோடி ஜோடியாக அழைத்து சமையல் நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள் என்று தெரியவில்லை. அந்த நிகழ்ச்சியில் நிறைய சுவாரசியம் இருக்கும் சிரிப்பு இருக்கும் ஆனால் அது இப்போது இல்லை. அதோடு மட்டுமில்லாமல் நான் தான் விஜய் டிவி மெட்டீரியல். ஆனால் வேறு தொலைக்காட்சியில் இருந்து வந்த கௌசிக் எப்படி விஜய் டிவி மெட்டீரியல் ஆக முடியும்? அவரை ஏன் இந்த நிகழ்ச்சியில் நடுவராக வைத்தார்கள் என்பதும் புரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். வனிதா விஜயகுமாரின் இந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications