விஷால் பண்றதை எல்லாம் பார்த்தா எனக்கு கவின் ஞாபகம் தான் வருது.. வனிதா விஜயகுமார் சொன்ன விமர்சனம்!

சென்னை: பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை தொடர்ந்து விமர்சித்து வரும் வனிதா விஜயகுமார் விஜே விஷாலை பார்த்தால் தனக்கு கவின் ஞாபகம் வருவதாக கூறியிருப்பது விஜே விஷால் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. விஜய் டிவியில் இருந்து ஏகப்பட்ட நடிகர்கள் சினிமாவில் வந்து சாதனையாளர்களாக மாறியுள்ளனர். அந்த வரிசையில் இந்த சீசனில் இருந்து சிலர் சினிமாவுக்கு வர வாய்ப்பு இருப்பதாக மக்கள் கருதி வரும் நிலையில், வனிதா இப்படியொரு கமெண்ட் அடித்துள்ளார்.

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கப்போவது இல்லை என முடிவெடுத்து விட்டு வெளிநாட்டுக்கு ஏஐ படிக்க சென்று விட்டதாக கூறுகின்றனர். இந்தியன் 3 ரிலீஸ், தக் லைஃப் ரிலீஸ், கல்கி 2 படம், அன்பறிவ் மாஸ்டர்களின் இயக்கத்தில் ஒரு படம் என கமல் பிசியாக உள்ள நிலையில், அவருக்கு பதிலாக விஜய் சேதுபதி புதிய பிக் பாஸ் ஹோஸ்ட்டாக மாறியுள்ளார்.

bigg boss tamil 8 vj vishal kavin

சமீபத்தில், நான் மீண்டும் உள்ளே போய் விஜய் சேதுபதியும் ஷோவை நடத்த முடியாமல் ஓட வேண்டுமா என வனிதா பேசியதும் ரசிகர்களை ஷாக் ஆக்கியது.

லேடி கெட்டப்பில் விஜே விஷால்: மீசையை வைத்துக் கொண்டே ஆண்கள் அணியினர் விளையாடலாம் என பிக் பாஸ் விஷாலுக்கு அட்வைஸ் சொல்லியும் கேட்காமல் தாடியை தொடர்ந்து மீசையையும் ஷேவ் செய்து விட்டு தான் ஒரு பர்ஃபார்மர் என்பதை மக்களுக்கு காட்ட வேண்டும் என்றும் தனக்கு எப்படியாவது சினிமாவில் சான்ஸ் கிடைத்து விட வேண்டும் என்கிற அனைத்து முயற்சிகளையும் விஜே விஷால் எடுத்து இந்த சீசனில் விளையாடி வருகிறார். ஆண்கள் அணியில் கடைசி வரை முத்துக்குமரன் மற்றும் விஜே விஷால் இந்த சீசனில் இருப்பார்கள் என தெரிகிறது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

bigg boss tamil 8 vj vishal kavin

கவின் தான் ஞாபகத்துக்கு வருகிறார்: பிக் பாஸ் 3வது சீசனில் வனிதா விஜயகுமார் போட்டியாளராக உள்ளே இருந்த போது கவினும் போட்டியாளராக இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ஹரிஷ் கல்யாண் மற்றும் கவின் தமிழ் சினிமாவில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த இளம் ஹீரோக்களாக வலம் வருகின்றனர். ஆரவ் அதனை தவற விட்டாலும் விடாமுயற்சி படத்தின் மூலம் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கலாம்.

bigg boss tamil 8 vj vishal kavin

விஜே விஷாலின் விளையாட்டை பார்க்கும் போது கவின் தான் தனக்கு ஞாபகத்துக்கு வருவதாக வனிதா விஜயகுமார் கூறியுள்ளார். விஜே விஷால் பெண் வேடமிட்டு நடனமாடியது எல்லாமே ரொம்பவே சூப்பரா இருக்கு என பாராட்டியுள்ளார் வனிதா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X