twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வசந்த் டி.வி.ஊழியர்கள் கடத்தல்! போலீஸ் கமிஷனரிடம் புகார்

    By Mayura Akilan
    |

    டிவி நிகழ்ச்சிக்காக ஆட்களை கடத்தி வந்து அடைத்து வைத்ததாக கூறி வசந்த் டிவி ஊழியர்கள் மூன்று பேரை மர்மநபர்கள் கடத்திச் சென்றுள்ளனர்.

    இது குறித்து வசந்த் டிவி நிர்வாகத்தினர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

    கடத்திச் சென்ற கும்பல் ஊழியர்களை விடுவிக்க 50 லட்சம் கேட்டு மிரட்டுவதாகவும், வசந்த் டிவியின் முதன்மை செயல் அதிகாரி அசோகன் கூறியுள்ளார்.

    வாய்மையே வெல்லும்

    வாய்மையே வெல்லும்

    வசந்த் டிவியில் வாய்மையே வெல்லும் என்ற ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பாகிறது. ஜீ தமிழ் டிவியில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை நடத்தி வந்த நிர்மலா பெரியசாமி இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

    குடும்ப பஞ்சாயத்து

    குடும்ப பஞ்சாயத்து

    தனிநபர்களுக்கு இடையேயான குடும்ப பிரச்னையை பேசி பஞ்சாயத்து பண்ணி வைக்கும் நிகழ்ச்சி இது. இந்த நிகழ்ச்சியில் ஏழைகளின் கண்ணீர் காசக்கப்படுகிறது என்ற புகார் உள்ளது.

    பரபரப்புக் கடத்தல்

    பரபரப்புக் கடத்தல்

    இந்த நிகழ்ச்சி தயாரிப்பில் பணியாற்றிய வசந்தன், கோபி, நோபல் ஆகியோரை மர்ம நபர்கள் கடத்திச் சென்றுள்ளனர். இது தொடர்பாக வசந்த் டி.வியின் முதன்மை செயல் அதிகாரி அசோகன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

    காதல் ஜோடி பஞ்சாயத்து

    காதல் ஜோடி பஞ்சாயத்து

    சில தினங்களுக்கு முன் கள்ளக்குறிச்சியில் இருந்து ஒரு பெண் தன்னை ஒருவர் காதலித்து 8 மாத கர்பிணியாக்கி விட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றுவதாகவும். அவருடன் தன்னை சேர்த்து வைக்குமாறும் கூறினார். சம்பதப்பட்ட அந்த பெண்ணையும், அவரது காதலரையும் சைதாப்பேட்டையில் உள்ள எங்கள் அலுவலகத்துக்கு அழைத்து வாய்மையை வெல்லும் டீம் பஞ்சாயத்து செய்துள்ளது.

    கும்பல் மிரட்டல்

    கும்பல் மிரட்டல்

    அப்போது ஒரு கும்பல் டிவி நிர்வாகத்தையும், நிர்மலா பெரியசாமி டீமையும் மிரட்டல் விடுத்துள்ளது. இதுபற்றி மாம்பலம் காவல் ஏற்கனவே புகார் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பினரும் காவல் நிலையத்திலேயே தகராறு செய்தார்கள்.

    ரூ. 50 லட்சம் கேட்டு மிரட்டல்

    ரூ. 50 லட்சம் கேட்டு மிரட்டல்

    இப்போது வசந்த் டிவி ஊழியர்களை அந்த கும்பல் கடத்திச் சென்று 50 லட்சம் கேட்டு மிரட்டுவதாக முதன்மை செயல் அதிகாரி கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். அவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எங்கள் ஊழியர்களை மீட்டுத் தரவேண்டும் என்றும் அவர் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Vasanth TV Employees were kidnapped by unidentified men during an attack on the TV office in Chennai.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X