வசந்த் டிவியில் இது நடிகர் திலகம் ஸ்பெஷல் வாரம்!

By Shankar

நடிகர் திலகம் சிவாஜி கணேசன்... தமிழ் சினிமா உள்ள வரை மறக்கமுடியாத மகத்தான கலைஞனின் பிறந்த நாள் இன்று.

இந்த நாளை மற்ற தொலைக்காட்சிகளை விட சிறப்பாக நினைவு கூர்கிறது வசந்தகுமாரின் வசந்த் தொலைக்காட்சி.

இன்று காலை 11 மணியிலிருந்து பட்டிமன்றம், சிவாஜி பட ஸ்பெஷல் பாடல்கள், காட்சிகள், படங்கள் என அசத்தி வருகிறது.

பட்டிமன்றம்

பட்டிமன்றம்

சிவாஜி நடிப்பில் மக்களைக் கவர்ந்தது அவரது காதலா, நடிப்பா என்ற தலைப்பில் காலை பதினோறு மணிக்குப் பட்டிமன்றம் நடந்தது. பகலில் சிவாஜியின் சிறந்த பாடல்கள், காட்சிகள் அடங்கிய என்றென்றும் சிவாஜி நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

டிஜிட்டல் கர்ணன், பாசமலர்..

டிஜிட்டல் கர்ணன், பாசமலர்..

சிவாஜியின் க்ளாசிக் படங்களில் மகத்தான படங்களாகக் கருதப்படும் கர்ணன், பாசமலரின் டிஜிட்டல் வடிவம் பற்றிய தகவல்கள் மற்றும் பிரத்தியேகக் காட்சிகளை மாலை 5 மணிக்கு ஒளிபரப்பினர்.

முதல் மரியைாதை அனுபவம்..

முதல் மரியைாதை அனுபவம்..

5.30மணிக்கு முதல் மரியாதை படத்தில் சிவாஜியுடன் நடித்த அனுபவங்களை நடிகர்கள் சத்யராஜ், வடிவுக்கரசி, கதாசிரியர் செல்வராஜ், கேமிராமேன் கண்ணன் ஆகியோர் பகிர்ந்து கொள்கின்றனர்.

மகா நடிகன் சிவாஜி

மகா நடிகன் சிவாஜி

இரவு 7.30மணிக்கு மகா நடிகன் சிவாஜி எனும் தலைப்பில் ஏவிஎம் சரவணன், கதாசிரியர் பாலமுருகன், முக்தா சீனிவாசன், வியட்நாம் வீடு சுந்தரம் உள்ளிட்டோர், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோர் சிவாஜியுடனான தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

சிவாஜி முதல் பயணம்

சிவாஜி முதல் பயணம்

இரவு 9 மணிக்கு சிவாஜி முதல் பயணம் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

சிறப்புப் படங்கள்

சிறப்புப் படங்கள்

இது தவிர, இன்று முதல் வரும் ஞாயிறு வரை சிவாஜி நடித்த திரைப்படங்களையும் வசந்த் டிவி ஒளிபரப்புகிறது.

திங்கள் கிழமை பிற்பகல் அம்பிகாபதி படம் ஒளிபரப்பானது. நாளை செவ்வாய்க்கிழமை பிற்பகல்2 மணிக்கு திருவருட்செல்வர், புதன்கிழமை 2 மணிக்கு எங்கிருந்தோ வந்தான், வியாழன் 2 மணிக்கு படித்தால் மட்டும் போதுமா, வெள்ளி 2 மணிக்கு தியாகம், சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு ஜல்லிக்கட்டு மற்றும் பிற்பகல் 2 மணிக்கு சந்திப்பு, ஞாயிற்றுக்கிழமை 10.30 மணிக்கு திருவிளையாடல் மற்றும் பிற்பகல் 2மணிக்கு எதிரொலி ஆகிய படங்கள் ஒளிபரப்பாகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X