»   »  நாகாவின் மர்மதேசம், பாலச்சந்தரின் பிரேமி : வசந்த் டிவியில் பாருங்க

நாகாவின் மர்மதேசம், பாலச்சந்தரின் பிரேமி : வசந்த் டிவியில் பாருங்க

Posted By:
Subscribe to Oneindia Tamil

வசந்த் தொலைக்காட்சியில் 90களில் பிரபலமாக ஒளிபரப்பான தொலைக்காட்சித் தொடர்கள் மீண்டும் ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ளன. மின்பிம்பங்கள் நிறுவனம் தயாரித்து ரசிகர்களிடையே சூப்பர் ஹிட் அடித்த தொடர்களான மர்மதேசம், பிரேமி ஆகிய தொடர்கள் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் வசந்த் டிவியில் ஒளிபரப்பாகத்தொடங்கியுள்ளன.

சினிமா ரிலீஸ் என்றால் போஸ்டர் ஒட்டி விளம்பரம் செய்வார்கள். ஆனால் டிவி சீரியர்களுக்கும் இன்றைக்கு போஸ்டர்கள் ஒட்டி விளம்பரம் செய்ய வேண்டியிருக்கிறது.கோடம்பாக்கத்தின் முக்கிய சாலைகளில் இன்றைக்கு ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

மர்மதேசம்

மர்மதேசம்

15 ஆண்டுகளுக்கு முந்தைய டிவி தொடர்கள் மீண்டும் வசந்த் டிவியில் ஒளிபரப்பாகிறது என்பதை விளம்பரப்படுத்தும் வகையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

நாகாவின் மிரட்டல்

நாகாவின் மிரட்டல்

மின்பிம்பங்களின் மர்மதேசம் டிவி வரலாற்றிலேயே ஒரு புது அத்தியாயத்தை ஏற்படுத்தியது. டெக்னிக்கலாக டிவியில் பல விஷயங்கள் புதிதாக இருந்தது மர்மதேசத்தில் தான். நாகா ஒளிப்பதிவு, இயக்கம் என மிரட்டியிருப்பார்.

இந்திரா சௌந்தரராஜன்

இந்திரா சௌந்தரராஜன்

கதை, திரைக்கதை வசனம் என இந்திரா சௌந்தரராஜனும் தன் பங்குக்கு அசத்தியிருப்பார். மர்மதேசம்' இயக்கிய நாகாவே தொடர்ந்து விடாதுகருப்பு','சிதம்பர ரகசியம்' போன்ற வெற்றிகரமான தொடர்களை இயக்கினார். மக்கள் கூட்டம் கூட்டமாக பஞ்சாயத்து போர்டு டிவிகளில் அமர்ந்து சீரியல் பார்த்த காலம் அது.

மர்மதேசம்

மர்மதேசம்

அதேபோல பாலச்சந்தர் இயக்கிய பிரேமி தொடரும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற தொடராகும். ரேணுகா, பாம்மே ஞானம், தீபா வெங்கட், ஆகியோர் நடித்துள்ளனர்.

பிரேமியாக ரேணுகா

பிரேமியாக ரேணுகா

1998ம் ஆண்டு ஒளிபரப்பான பிரேமி சீரியலில் பாலச்சந்தரின் டிரேட் மார்க் கதாநாயகியாக அசத்தியிருப்பார் ரேணுகா. இப்போது இந்த தொடரும் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் வசந்த் டிவியில் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

English summary
Marma Desam is a Tamil TV Show - Serial produced under the Kavithalaya banner, directed by Naga and written by Indira Soundarrajan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil