Bigg Boss: விஜய் டிவில சொன்னாங்க.. பிக் பாஸில் கமலுக்கு அடுத்து திருமாதான்.. போட்டுடைத்த கூல் சுரேஷ்

சென்னை: விஜய் டீவியில் கடந்த 7 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் முக்கியமானது. கடந்த 7 ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர், கமல்ஹாசன் அதிகப்படியான படங்களில் கமிட் ஆகியுள்ளதால் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க நேரம் இல்லாமல் உள்ளது என தெரிவித்துள்ளார்.

இதனால் இந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார்கள் என்ற கேள்வி பலரது மத்தியில் எழுந்துள்ளது. கமல் ஹாசன் விலகுவதாக கூறிவிட்டதால், விஜய் டீவி தரப்பில் இருந்து, சூர்யா, விஜய் சேதுபதி மற்றும் சிம்பு ஆகியோரை அனுகியதாக கூறப்படுகின்றது. இதில் சூர்யா முடியாது எனக் கூறியதாகவும் தகவல்கள் வெளியானது.

Thirumavalavan Bigg Boss Cool Suresh

சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள தோழர் சேகுவேரா படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சத்யராஜ், விசிக தலைவர் தொல். திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் முத்தரசன், படத்தில் நடித்துள்ள கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய கூல் சுரேஷ் பிக் பாஸ் நிகழ்ச்சியை விசிக தலைவர் திருமாவளவன் தொகுத்து வழங்கவேண்டும் என கூறியுள்ளார்.

கூல் சுரேஷ்: தோழர் சேகுவேரா படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் கூல் சுரேஷ் பேசுகையில், " நான் பிக்பாஸ் போய்ட்டு வந்தது எல்லாருக்கும் தெரியும். இப்போ கமல் சார் பிக்பாஸில் இருந்து விலகிவிட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். கமல் சார் பிக்பாஸில் இருந்து விலகியாதால், அடுத்து யாரை தொகுத்து வழங்கச் சொல்லலாம் என்ற பேச்சு மிகத்தீவிரமாக போய்க்கொண்டு உள்ளது. எனக்கும் விஜய் டீவிக்கும் இன்னும் தொடர்பு இருக்கு என்பது பலருக்குத் தெரியும்.

திருமாவளவன்: விஜய் டீவியில் மிகவும் முக்கியமான பொறுப்பில் உள்ளவரிடம் நேற்று பேசிக்கொண்டு இருந்தேன். அப்போது அவரிடம் அடுத்து யார் பிக்பாஸை தொகுத்து வழங்கினால் நன்றாக இருக்கும் என நான் கேட்டேன். அதற்கு, அவர், தொல். திருமாவளவன் சார் தொகுத்து வழங்கினால் நன்றாக இருக்கும் எனக் கூறினார். எதற்காக இப்படிச் சொல்கின்றீர்கள் எனக் கேட்டேன். அதற்கு அவர் கூறினார். தொல். திருமாவளவன் சாரிடம் நீதி இருக்கும், நேர்மை இருக்கும், உண்மை இருக்கும். யார் தவறு செய்தாலும் அவர்களுக்கு உடனடியாக தண்டனை கொடுக்கும் தில் திருமாவளவன் சாரிடம் உள்ளது.

Thirumavalavan Bigg Boss Cool Suresh

கமல்: இது நடைமுறைக்கு வந்தால் ஒட்டுமொத்த இந்தியாவுமே, ஏன், சட்டத்தை எழுதிய அம்பேத்கரே தனது மாணவன் உலகமே கவனிக்கும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றார் என்று எழுந்து நின்று கைத்தட்டுவார். உலகமே பார்க்கும் நிகழ்ச்சியில் தவறு நடந்தால் அதனை தட்டிக் கேட்கும் தில் வேண்டும். நான் தில் வேண்டும் எனக் கூறிவிட்டேன் என கமல் சாருடன் இதனை கோர்த்து பேசிவிடாதீர்கள். அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. கமல் சார் மிகவும் நல்லவர்தான். இது விஜய் டீவியில் அவர்கள் கூறியதைக் கூறினேன்" எனப் பேசினார்.

Thirumavalavan Bigg Boss Cool Suresh

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X