வீரா சீரியலில் மெய்யழகன் படமா!.. சின்னத்திரையில் அறிவழகன் என்ட்ரி.. சட்டை மட்டும் தான் புதுசு
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம், அண்ணா, வீரா போன்ற சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கிறது. குறிப்பாக திரை பிரபலங்களை காட்டிலும் சின்னத்திரையில் வரும் நடிகர்களை தங்களது குடும்பத்தில் ஒருவராக பார்க்கின்றனர். அந்த வகையில் வீரா சீரியலையும் மக்கள் அதிகம் பேர் பார்த்து ரசிக்கின்றனர். இந்த சூழலில் வீரா சீரியலில் வெளியாகியிருக்கும் புரோமோ வீடியோவை பார்த்து தான் நெட்டிசன்கள் கதற தொடங்கி விட்டனர். அப்படி என்னதான் இருக்கிறது என்றுதான் பார்ப்போம் வாங்க.
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் வீரா சீரியலுக்கு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. மக்கள் அதிகம் பார்க்கும் சீரியலாக வீரா இருப்பதால் இதனை சண்டே ஸ்பெஷலாகவும் மாற்றியிருக்கின்றனர். ரொம்ப கலகலப்பாகவும் காதலும், மோதலுடன் இருக்கும் இந்த சீரியலை அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கின்றனர். முன்பு எபிசோடுகளில் வீரா மாறனை விட்டு விலகி செல்ல முயற்சித்தார். விவாகரத்து கேட்டும் அடம்பிடித்தார். மாறன நெருங்கி வரும்போதெல்லாம் வீரா வெறுப்பேத்துவார். ஆனால், இப்போது மாறன் விலகி செல்வதும் வீரா நெருங்கி வருவதும் என ஒரே ரொமான்ஸ்தான்.

பழிவாங்கும் கண்மணி: ராமச்சந்திரன் குடும்பத்தை பழிவாங்குவதற்காக ராகவனின் மனைவியாக ராமச்சந்திரன் வீட்டிற்குள் மருமகளாக கண்மணி வந்திருக்கிறார். கண்மணி நல்லவள் என்று ராமச்சந்திரன் நம்பி கடையில் சில பொறுப்புகளையும் கொடுத்திருக்கிறார். அப்படி கடையில் இருக்கும் கண்மணி ஏதாவது சின்ன சின்ன பிரச்னை பண்ணி ராமச்சந்திரன் குடும்பத்திற்கு ஓவர் குடைச்சலை கொடுத்தும் வருகிறார். இதை தெரிந்து கொண்ட வீரா, அக்காவை திருத்தி ஒரு நல்ல மருமகளாக வாழ வைக்க வேண்டும் என்று கண்மணி பற்றிய விஷயங்களை யாரிடமும் சொல்லாமல் மறைமுகமாக கண்மணியை திருத்துவதற்கு முயற்சி எடுத்து வருகிறார்.
புதுவில்லி விஜி: விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்ற சீரியலில் நரி தந்திரத்தோடு ராமச்சந்திரன் வீட்டிற்குள் நுழைந்திருக்கிறார் விஜி. யப்பா என்ன ஒரு வில்லத்தனம். கரெக்டா ஸ்கெட்ச் போட்டு பிளான் பண்ணாலும் கண்மணி கணக்கில் போய் சேர்கிறது. வீராவும் கண்மணியை கண்டு கோபத்தொடு கொப்பளிக்கிறார். நாம நினைத்தது நடக்கிறது என்ற பாவனையோடு விஜி வலம் வருகிறார். இத்தனை குழப்பங்களையும் விஜிதான் செய்கிறார் என்பது கொஞ்சம் கூடவா மாறனுக்கு சந்தேகம் வரவில்லை என்று பார்வையாளர்கள் கேட்கின்றனர்.

செம ட்விஸ்ட்: விஜியின் அப்பாவை கொலை செய்ததற்காக ராமச்சந்திரன் குடும்பத்தை பழிவாங்க வந்திருக்கிறார். ஆனால், யாரும் இப்படி ஒரு ட்விஸ்ட் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். வீராவின் அண்ணனை கொலை செய்தது விஜி என அவரே தெரிவிக்கிறார். மாறனை கொலை செய்ய ஆள் அனுப்புவது, திருமண மண்டபத்தில பாம்ப் வைப்பது அன அடுக்கடுக்காக அவர் செய்த குற்றங்களை கண்ணாடி முன்பு பேசி தெரிவித்து வருகிறார். இதுகுறித்த புரே்ாமோ வெளியானதும் ஆஹா இந்த விஜி பொண்ணு இன்னும் என்ன சம்பவம் பண்ண போறாங்களோ என்ற ஆவலும் அதிகரித்திரிக்கிறது. மாறன் - வீராவும் ரொமான்ஸ் காட்சிகள் ஒரு பக்கம் இருந்தாலும் சினிமாவை விட பயங்கர வில்லத்தனத்தை விஜி காட்டுகிறார். இந்த விஜி பெண்ணிடம் இருந்து ராமச்சந்திரன் குடும்பம் எப்படி தப்பிக்க போகிறது என்பது அனைவரும் பார்வையும் இருக்கிறது.
வீரா தங்கை திருமணம்: வீராவின் தங்கையும் மாறனின் தம்பி கார்த்திக் திருமணம் கோலாகலமாக நடந்து வருகிறது. இதில், விஜி இந்த திருமணத்தை நிறுத்த பக்கா ஸ்கெட்ச் போட்டு பிளான் ஒன்றை தயார் செய்திருக்கிறார். ஆனால், இடையில் இந்த கெளசிக் வந்தால் என்ற ரேஞ்சுக்கு கண்மணி என்ன புலம்பி தவிக்கிறார். நாம எது செய்தாலும் தவறாகவே நடக்குது என ஒரு பக்கம் புலம்பல் வேற. வீரா மாறனை பார்த்து சீண்டுவது நான் கட்டியிருக்கும் புடவை நல்லா இருக்கா என்று கேட்கும் போது மாறன் திமிறாக இப்ப என்ன சொல்லனும் எதிர்பாக்குற என டோஸ் விடும் காட்சிகள் அழகுதான். ஆனால், எல்லோருக்கும் இந்த திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்பது தான் மிகப்பெரிய ஆசையாக இருக்கிறது. இவ்வளவு களேபரத்திலும் ஒரு கிளுகிளுப்பு தேவைப்படுவது போல் ஒரு புரோமோ வெளியாகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அறிவழகன் என்ட்ரி: சீரியல்களுக்கு சினிமா படங்களின் பெயர்களை அல்லது அதில் இடம்பெறும் காதல் காட்சிகளை காபி அடிப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால், இப்படியொரு சென்டிமென்ட் காட்சியை அப்படியே காப்பி அடிப்பது ஓவர் ப்ரோ என நெட்டிசன்கள் கேட்க தொடங்கிவிட்டனர். மெய்யழகன் படத்தில் அரவிந்த்சாமி அறிவழகனாக வந்து தனது சித்தப்பா மகளின் கல்யாணத்தில் கலந்துகொண்டு அன்பு மழையில் அனைவரையும் நனைய வைத்திருப்பார். அதேபோன்ற ஒரு காட்சிதான் வீரா சீரியலிலும் இடம்பெறுகிறது. இதில், ட்விஸ்ட் என்னவென்றால் ரமணி விஸ் ரமணி தேவா கானா பாடல்களில் இவர் போடாத ஆட்டமே இல்லை. நடிகர் ராம்ஜி அறிவழகனாக என்ட்ரி கொடுத்து தங்கையின் கல்யாணத்தில் கலந்துகொண்டு அதே சட்டை, அதே கண்ணாடி, அதே வளையல், கால் கொலுசு என ஓவர் டோஸ் கொடுத்துள்ளனர்.
நெட்டிசன்கள் குமுறல்: ஒரு படத்தில் பிடித்த பாட்டை வைக்கலாம், அதற்காக ஒரு படத்தோட அழகான காட்சியை இப்படியா வைப்பது என நெட்டிசன்கள் இந்த புரோமா வீடியோவை பார்த்து குமுற தொடங்கிவிட்டனர். கொஞ்சம் கூட மாற்றாமல் அதே காட்சியை வைக்க எப்படிப்பா மனசு வருது. இதுக்கு எல்லாம் காபிரைட்ஸ் கேட்கமாட்டார்களா என போஸ்ட் பதிவிடுகின்றனர். அவர் வெள்ளித்திரை அரவிந்த்சாமி, இவர் சின்ன பட்ஜெட் அரவிந்த்சாமியா என ராம்ஜியை கலாய்க்க தொடங்கிவிட்டனர். சத்தியமா சகிக்கலை என கூற தொடங்கியுள்ளனர்.

ராமச்சந்திரனுக்கு ஆபத்து: மகனின் திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டு விடிஞ்சா கல்யாணம் என ராமச்சந்திரன் பெரும் கனவோடு இருக்கிறார். இந்த நிலையில், அவரை கடத்தி கொலை செய்ய திட்டம் போடுவது போன்ற புதிய புராேமோ வீடியோ வெளியாகிருக்கிறது. இதில், ராமச்சந்திரனை ஒரு கும்பல் கட்டையால் அவரை அடித்து காரில் கடத்தி சென்று தீயை பற்றவைத்து கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். பின்னர் போன் காலில் முடிந்தால் உங்க அப்பாவை காப்பாத்திக்க என்று மிரட்டல் வந்ததும் அலர்ட் ஆன மாறன் அறிவழகனாக வந்திருக்கும் ராம்ஜியுடன் சேர்ந்து எதிரிகளிடம் சண்டை போட்டு ராமச்சந்திரனை காப்பாற்றும் வீடியோ வெளியிட்டுள்ளது. கார்த்திக்கின் திருமணம் நடக்குமா நடக்காதா என்ற எதிர்பார்ப்பும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











