Nila serial: அடடா சரியான நேரத்தில் வீர்பத்ரனுக்கு விபத்து!

சென்னை:சன் டிவியின் நிலா சீரியலில் நீலாம்பரி வீரபத்ரனை ஹைதராபாத்துக்கு உளவு பார்க்க அனுப்பி வச்சு இருக்காங்க. போன இடத்துல வீரபத்ரனுக்கு விபத்து நடந்துருது.

நிலா ஹைதராபாத்துக்கு காதலன் கார்த்திக்கை துணைக்கு அழைச்சுக்கிட்டு பெத்தவங்களை தேடிப்போனவ... வரும்போது அசோக்கை கல்யாணம் செய்துகிட்டு தம்பதியா வந்து நிக்கறா.

நிலாவின் இந்த மாற்றம் நீலாம்பரிக்கு சந்தோஷம் என்றாலும், இல்லை நிலா ஏதும் சதி செய்கிறாளோ என்கிற சந்தேகமும் வந்துருது. இது என்ன என்று கண்டுபிடிக்கவே வீரபத்ரனை ஹைதராபாத் அனுப்பி வைக்கறாங்க நீலாம்பரி

ஸ்ரீதர் உண்மையா

ஸ்ரீதர் உண்மையா

வீரபத்திரன் கார் ரிப்பேராகிவிட சாலையில் இறங்கி நிக்கறான். அப்போது நீலாம்பரி கொலை செய்து இறந்துவிட்டார் என்று நினைத்து இருக்கும் ஸ்ரீதரை அதாவது நிலாவின் அப்பாவை பார்க்கிறான் .ஆனால், அவர் அப்போது இஸ்லாமியர் போல காட்சி தர... அவரை வீடியோ எடுக்க முயற்சி செய்து எடுத்தும் விடுகிறான் வீரபத்ரன். இதை நீலாம்பரிக்கு சொல்லலாம் என்றால் அவங்க என்ன போனை எடுக்க மாட்றாங்கன்னு சொல்லிக்கறான்.

தாலி நிலா

தாலி நிலா

நிலாவுக்கும் , அசோக்குக்கும் எப்படி, எங்கே கல்யாணம் நடந்துச்சுன்னு விசாரி வீரபத்ரான்னும் நீலாம்பரி உத்தரவு போட்டு இருந்ததுனால, அதையும் ஒ ரு வழியா கண்டு பிடிச்சுடறான் வீரபத்ரன். நிலா ஹைதராபத்தில் உள்ள ஒரு கோயிலில் அசோக் பக்கத்தில் நிற்க தனக்குத் தானே தாலியை கட்டிக்கறா.அந்த கண்காணிப்பு கேமிரா தொகுப்பையும் வாங்கிகிட்டு நீலாம்பரிக்கு போன் செய்யறான் வீரபத்ரன்.

சாலையில் காதில் போன்

சாலையில் காதில் போன்

சாலையின் ஓரத்தில், தன்னோட ரிப்பேரான காரிலே சாய்ஞ்சுக்கிட்டு வீரபத்ரன் நீலாம்பரிக்கு போன் செய்யறான். நீலாம்பரி, உனக்கு நானே போன் செய்யணும்னு இருந்தேன்.இத்தனை நாள் போன் பண்ணலையே ஏன்னு கேட்கறாங்க. உங்க போன்தான் மேடம் எடுக்கலைன்னு அவன் சொல்ல...சரி சரி விஷயத்தை சொல்லு.ரெண்டு பேருக்கும் கல்யாணம் எங்க நடந்துச்சுன்னு கேட்கறாங்க.

மேடம் தெரிஞ்சுருச்சு

மேடம் தெரிஞ்சுருச்சு

மேடம் நிலாவைப் பத்தின உண்மை ஒண்ணு தெரிஞ்சுகிட்டேன். இன்னொரு முக்கியமான விஷயம் மேடம்.உங்க பழைய எதிரி பத்தின விஷயம். இதுக்கு டீல் பேசிக்கலாமான்னு வீரபத்ரன் கேட்கறான்.என்ன விஷயம்னு சொன்னாத்தானே வீர்பத்ரா டீல் பேச முடியும்னு நீலாம்பரி கேட்கறாங்க. மேடம் உங்களுக்கு மிக முக்கியமான விஷயம் மேடம். உங்கபழைய எதிரின்னு சொல்லிக்கிட்டு இருக்கும்போதே அவன் மேல் ஓரு கார் வந்து மோதி கீழே விழுந்துடறான். இப்போதைக்கு நீலாம்பரிக்கு எந்த விஷயமும் தெரிய வாய்ப்பில்லாமல் போயிருது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X