வீரம் படத்தில் நடித்த சிறுமியா இது? அவங்க அம்மா இத்தனை விளம்பரங்களில் நடித்திருக்கிறாரா?

சென்னை: நடிகர் "அஜித்குமார்" நடித்த "வீரம்" திரைப்படத்தில் குழந்தையாக நடித்த நடிகை "யுவினா" தற்போது "சைரன்" என்ற திரைப்படத்தில் நடித்திருக்கும் நிலையில் சமீபத்தில் அவருடைய குடும்பம் பற்றிய தகவல்கள் இணையத்தில் பலரையும் வியக்க வைத்திருக்கிறது.

யுவினா, அஜித்குமாரோடு மட்டுமல்லாமல் நடிகர் "சூர்யா"வோடு "மாஸ்" திரைப்படத்தில் அவருக்கு குழந்தையாக நடித்து இருந்தார். இவருடைய கியூட்டான நடிப்பு பலரையும் கவர்ந்திருந்த நிலையில் இப்போது இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் பலரையும் வியக்க வைத்திருக்கிறது. இந்த நிலையில் யுவினா மட்டுமல்லாமல் அவருடைய அம்மாவும் பல விளம்பரங்களில் நடித்திருக்கிறார் அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

Veeram Movie Child Yuvina s Mother popular ad Actresses Devi magesh

அந்த வகையில் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமான பலர் பிறகு கதாநாயகனாகவோ, கதாநாயகியாகவோ ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள். நடிகை "மீனா" குழந்தையாக "ரஜினிகாந்த்" உடன் நடித்து பிறகு அவருக்கே ஜோடியாக மாறிவிட்டார். இப்படி பலர் சினிமாவில் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் ஒரு சிலருடைய வளர்ச்சியை பார்த்து ரசிகர்கள் இவரா அவர் என்று வியந்து வருகிறார்கள்.

அந்த மாதிரி தான் சில வருடங்களுக்கு முன்பு வீரம் திரைப்படத்தில் பார்த்த குழந்தையின் இப்போதைய லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்ததும் ரசிகர்கள் வாயடைத்துப் போகிறார்கள். தமிழில் சிறுத்தை சிவா இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியான "வீரம்" திரைப்படத்தில் நடிகை "தமன்னா"வின் குடும்பத்தில் உள்ள சிறுமியாக யுவினா நடித்திருந்தார். ஆனால் யுவினாவை முதன் முதலில் அறிமுகம் செய்து வைத்து "ஏவிஎம்" நிறுவனம் தான்.

Veeram Movie Child Yuvina s Mother popular ad Actresses Devi magesh

2011 ஆண்டு வெளியான "உறவுக்கு கை கொடுப்போம்" தொடரின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான யுவினா அதற்குப் பிறகு "விக்ரம் பிரபு" நடிப்பில் வெளியான "இவன் வேற மாதிரி" என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆகி இருக்கிறார். அதற்கு பிறகு தான் இவர் வீரம் திரைப்படத்தில் "கயல்" என்ற கேரக்டரில் நடித்திருந்தார். கயல்விழியின் உண்மையான பெயர் "யுவினா பார்ததி".

இவர் 2008இல் மும்பையில் பிறந்த நிலையில் இவருடைய அம்மா "தேவி மகேஷ்" பிரபல விளம்பர நடிகையாக இருந்து வருகிறார். இவர் செந்தூர் சோப்பு விளம்பரத்தில் நடித்து பலருடைய மனதை கொள்ளை கொண்டவர். அந்த விளம்பரத்தில் எப்படி இவரை ஒரு குழந்தை வந்து அம்மா என்று கூப்பிட்டு அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்ததோ அதுபோலத்தான் இப்போது இந்த செய்தியை கேட்ட ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.

அதுபோல யுவினாவின் அம்மா தேவி மகேஷ் 100க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்திருக்கிறார். அதிலும் சத்தியா ஷோரூமின் விளம்பரத்தில் பாக்யலட்சுமி சீரியல் கோபியோடு ஜோடியாக இவர் நடித்திருக்கிறார். அதுபோல சமையலுக்கு தேவையான எண்ணெயிலிருந்து வீட்டிற்கு தேவையான பல பொருள்களுக்கான விளம்பரங்களில் இவர் நடித்திருக்கிறார்.

அதுபோல "அரண்மனை 2" தேவி மகேஷ் நடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் 2019 ஆம் ஆண்டு ஜீ தமிழில் ஒளிபரப்பான "சூப்பர்மாம்" என்ற நிகழ்ச்சியிலும் போட்டியாளராக யுவினா மற்றும் அவருடைய அம்மா தேவியும் கலந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அப்போது பலருக்கும் பெரிய அளவில் இவர்கள் பற்றி தெரியாமல் இருந்த நிலையில் எப்போது யுவினா கலந்து கொண்ட ஒரு பேட்டியில் தன்னுடைய அம்மாவை பற்றி பேசிய நிலையில் இந்த செய்தி இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

Veeram Movie Child Yuvina s Mother popular ad Actresses Devi magesh

யுவினா மும்பையில் பிறந்து இருந்தாலும் நடிப்புக்காக சென்னையில் குடும்பத்தோடு செட்டில் ஆகி இருக்கிறாராம். அதிலும் இவர் சூர்யா நடிப்பில் வெளியான "மாஸ்" திரைப்படத்தில், "எல்லா வீட்டிலேயும் ஒரு தம்பியோ தங்கச்சியோ இருக்கு... எனக்கு துணைக்கு யாருமே இல்லை" என்று பாவமாக முகத்தை வைத்து கொடுத்த க்யூட்டான எக்ஸ்பிரஷன் பலருடைய ஃபேவரைட். அதற்குப் பிறகு அரண்மனை, கத்தி, மஞ்சப்பை, மேகா என்ற பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் யுவினா நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X