twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கோவிலை காவல் காக்கும் சைவ முதலைப் பற்றி தெரியுமா? வேந்தர் டிவியின் மூன்றாவது கண் பாருங்க

    By Mayura Akilan
    |

    சென்னை : கேரளாவில் இருக்கும் முதலை காவல் காக்கும் அனந்தபத்மநாப சாமி கோயில் பற்றின விறுவிறுப்பான தகவல்கள் இந்த வாரம் வேந்தர் டிவியில் மூன்றாவது கண் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

    வேந்தர் டிவியில், திங்கள் முதல் வெள்ளி வரை தினந்தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது மூன்றாவது கண். அமானுஷ்யங்களைப் பற்றின ஒரு பரப்பரப்பான தேடல்தான் இந்த நிகழ்ச்சி. அமானுஷ்ய உலகில் இதுவரை மறைந்திருந்த பல பயங்கர சடங்குகளையும் நம்பவே முடியாத ஆச்சரியங்களையும் மூன்றாவது கண் நிகழ்ச்சி வெளியுலகின் பார்வைக்கு கொண்டு வந்திருக்கிறது .

    மூன்றாவது கண்

    மூன்றாவது கண்

    பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவோடு 500 எபிசோடுகளை கடந்து வெற்றிநடைபோட்டு வரும் மூன்றாவது கண் நிகழ்ச்சியில் தற்போது, புதிய முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளது. வரும் வாரம் முதல் தமிழகத்தைத்தாண்டி பல மாநிலங்களில் இருக்கும் அமானுஷ்ய நிகழ்வுகள் தொடராக மூன்றாவது கண் நிகழ்ச்சியில் இடம்பெற உள்ளது.

    கேரளா கோவில்

    கேரளா கோவில்

    அந்த வகையில் வரும் வாரம், கேரளாவில் இருக்கும் முதலை காவல் காக்கும் அனந்தபத்மநாப சாமி கோயில் பற்றின விறுவிறுப்பான தகவல்கள் ஒளிபரப்பாக உள்ளது. கேரளா அனந்த பத்மநாப சாமி கோயில் நிலவறையில் இருந்து கிடைத்த புதையலைப்பார்த்து உலகமே வியப்பில் ஆழ்ந்தது.

    முதலைக்கோவில்

    முதலைக்கோவில்

    அந்த அனந்த பத்மநாப சாமி கோயிலின் நீரால் சூழப்பட்ட ஆதிக்கோயிலைத்தான் ஒரு முதலை காவல் காத்து வருகிறது. சைவம் மட்டுமே சாப்பிட்டு உயிர்வாழும் அந்த முதலைக்கு பபியா என்று பெயர் சூட்டி அழைக்கிறார்கள். முதலையை தரிசனம் செய்தால் அதிர்ஷ்டம் என்பதால், இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் எப்படியாவது இந்த முதலையை பார்க்க துடிக்கிறார்கள்.

    அமானுஷ்யங்கள்

    அமானுஷ்யங்கள்

    அகத்தியரின் சீடரால் உருவாக்கப்பட்ட, இந்த கோயிலின் நீர் சூழப்பட்ட இந்த குளத்திற்குள் பல ரகசியங்கள் புதைந்திருக்கிறது. இங்கு முதலை காவல் காப்பதன் பின்னணியிலும் சில அமானுஷ்யங்கள் இருக்கிறது. இந்த முதலை இறந்தால், அடுத்து, ஒரு முதலை எங்கிருந்தோ வந்து இந்த காவல் காக்கும் பணியை தொடர்கிறது..இப்படி முதலைக்கோயிலுக்குள் ஒளிந்திருக்கும் அமானுஷ்யங்கள் வரும் வாரம் வேந்தர் டிவியின் மூன்றாவது கண் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாக உள்ளது. திங்கள் முதல் வெள்ளி தோறும் தினமும் இரவு 9.30 மணிக்கு வேந்தர் டிவியில் ஒளிபரப்பாகிறது மூன்றாவது கண் நிகழ்ச்சி.

    English summary
    Moondravadhu Kann is a mystery hunting show that brings out several myths about blind faith, ancient history and cultural believes this week The Crocodile temple program telecast on Vendhar TV.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X