Don't Miss!
- News ஏத்துக்கவே முடியாது..புண்படுத்தீட்டீங்க! ஒன்று கூடிய தமிழக கட்சிகள்..மோடி மீது டைரக்ட் அட்டாக்..!
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வெங்கட் பிரபு வழங்கும் ‘கோலிவுட் கிங்’
சென்னை 600028 திரைப்படத்தை இயக்கிய வெங்கட் பிரபு தமிழ் திரை உலகில் பிஸியான இயக்குநராக இருந்து வருகிறார். சரோஜா, கோவா, மங்காத்தா போன்ற படங்களுக்குப் பின்னர் கார்த்தி நடிக்கும் 'பிரியாணி' படத்தில் பிஸியாக இருக்கும் வெங்கட் பிரபு தற்போது விஜய் டிவியில் 'கோலிவுட் கிங்' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
சினிமாவைப் பற்றி தெரிந்தவர்கள் யாராக இருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறலாம். ஒவ்வொரு வாரமும் பிரபல நட்சத்திரங்களின் ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள். அவர்களிடம் அந்த ஹீரோவைப் பற்றிய, அவர் நடித்த திரைப்படங்களைப்பற்றிய கேள்விகள் கேட்கப்படும். அவர்களில் சரியான பதில்களை சொல்பவர்கள் நிகழ்ச்சியின் அடுத்தடுத்த சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப் படுவார்கள். ஒவ்வொரு சுற்றிலும் அவர்களுக்கான பரிசுத்தொகையும் அதிகமாகிக் கொண்டே செல்லும். இறுதியில் அனைத்து கேள்விகளுக்கும் பதில்களை சரியாகச்சொல்லும் ஒரு ரசிகர் அந்த வாரத்தின் கோலிவுட் கிங்'காக தேர்ந்தெடுக்கப்படுவார்.
சினிமாவைப் பற்றிய நிகழ்ச்சி என்பதாலும், வெங்கட் பிரபு தொகுத்து வழங்குவதாலும் நிகழ்ச்சி கலகலப்பாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். விஜய் டிவியில் சனிக்கிழமை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது 'கோலிவுட் கிங்'