செல்வி.. தமிழ் செல்வி... பேரே இவ்ளோ அழகா இருக்கே... எப்போ வருவா?

சென்னை: சன் டிவியில் அடுத்தடுத்து புதுப்புது சீரியல்கள் ஒளிபரப்பாகிட்டே இருக்கு. அதோட சீரியல்களின் நேர மாற்றமும் தொடர்ந்துக்கிட்டே இருக்கு.

சந்திரகுமாரி சீரியலின் நேர மாற்றம், ரோஜா சீரியலின் நேர மாற்றம்...நிலா சீரியல் என்று புது வருகை.. அடுத்து அருந்ததி திகில் சீரியலின் வருகை என்று சன் டிவியில் புற்றீசல்கள் போல புது சீரியல்களின் வருகை ஓய்ந்த பாடில்லை.

very lovely selvi that is tamil selvi

ஜூன் மாதத்தில் இருந்து சன் டிவியில் அதிரடியான மாற்றங்கள் இருக்கும் என்று தகவல்கள் வெளியான நிலையில் இப்போது புது புது சீரியல்களின் வருகை என்று அதிரடிகளின் முதற்கட்ட ஆரம்பம் இருக்கின்றது.

very lovely selvi that is tamil selvi

மக்களை முழுக்க முழுக்க சீரியல்களில் கட்டிப்போடும் ஆதிக்கமாகவும் சன் டிவி இருக்கிறது. மற்ற சேனல்களில் சீரியல்கள் இருந்தாலும் மாலை முதல் இரவு வரைதான் அவை ஒளிபரப்பாகின்றன.

பகல் நேரங்களில் முதல் நாள் ஒளிபரப்பான சீரியல்களே ஒளிபரப்பாவதால் மக்களுக்கு பார்த்தாக வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை.

very lovely selvi that is tamil selvi

ஆனால், சன் டிவியில் எல்லாமே ஒரு முறை ஒளிபரப்பாகும் சீரியல்கள் என்பதால், சன் டிவி பார்ப்பவர்களுக்கு எப்போதும் டிவி சீரியல்களே கதி என்று கிடக்கும் நிலையைத்தான் உருவாக்கி மக்களைக் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது.

very lovely selvi that is tamil selvi

எதிலும் நல்லதும் இருக்கிறது.. கெட்டதும் இருக்கிறது...

திங்கள் முதல் அக்னி நட்சத்திரம் என்று ஒரு புதிய சீரியல் மதியம் ஒரு மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.பிரியமானவள் சீரியலின் பகல் நேர ஒளிபரப்பின் நேரமும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

very lovely selvi that is tamil selvi

தமிழ்செல்வி என்று நல்ல தமிழ் பெயரில் ஒரு சீரியலும், அக்னி நட்சத்திரம் என்று ஒரு சீரியலும் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. தமிழ்செல்வி பெயரே அருமையாக இருக்கிறது.. எப்போது தமிழ் செல்வியை பார்க்கலாம்...ஆவலுடன்...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X