Naam iruvar namakku iruvar serial: ஓ...முதலிரவில் இப்படியும் மூட் கிரியேட் பண்ணலாமா?

சென்னை: விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இரண்டு பேருக்கு முதலிரவு நடக்குது.அதாவது அரவிந்த்- தாமரை மற்றும் மாயன்- தேவி தம்பதிக்கு.

மாயனும், தேவியும் சும்மா முதலிரவைப் போக்கி விடலாம் என்று முடிவு செய்து, தனித்தனியாக படுத்துக்கறாங்க. தேவிக்கு இஷ்டம் இல்லாமல் மாமனாருக்காக நடிக்க வந்திருக்கிறாள்.

தாமரைக்கும், அரவிந்துக்கும் இரு மனம் ஒத்துப் போகிறது.எப்போது ஒன்று சேரலாம் என்று காத்திருக்கையில்தான், இந்த கல்யாண நாள் கொண்டாட்டம், முதலிரவு ஏற்பாடுகள் எல்லாம் நடக்கிறது.

தேவி மாயன்

தேவி மாயன்

மாயனுக்கும் தேவிக்கும் சேர்ந்து வாழ விருப்பமிருந்தாலும்,, தேவியை அவளது வீட்டார் குழப்பி வைத்து இருக்கிறார்கள்.இன்னும் இரண்டு மூன்று நாட்களில் விவாகரத்து வழக்கின் தீர்ப்பு வெளி வர இருக்கும் நிலையில் தேவி இப்படி நடப்பதற்காக மனம் வெதும்பி அழுது கொண்டு இருக்கும் நிலையில்தான் இதை பெரிதாக எடுத்துக்காதீங்க நடிப்புதானேன்னு மாயன் பொண்டாட்டிக்கு சமாதானம் சொல்றான்.

தாமரை அரவிந்த்

தாமரை அரவிந்த்

டாக்டர் அரவிந்த், தாமரை கூட கோர்ட்டில் விவாகரத்து வழக்கு போட்டு, அவர்களுக்கும் ஓரிரு நாட்களில் விவாகரத்து வழக்கின் தீர்ப்பு வரவிருக்கிறது. இருந்தாலும், போகப் போகத் தாமரையை அரவிந்துக்கும் பிடித்துப் போகிறது. இருவரும் ஒன்று சேரலாம் என்று முதல் இரவுக்காகத்தான் காத்து இருந்தார்கள்.

இதுதானா அது?

இதுதானா அது?

என்னதான் முதலிரவு ,இருவருக்கும் பிடித்து இருக்கிறது என்றாலும், முதலிரவுக்கு ஒரு மூட் கிரியேட் பண்ணுவது ஒன்று இருக்கணும் போல. தேவியும், மாயனும்தான் தூங்கி விடுகிறார்கள் ஆனால், பிடித்த மனைவியை பக்கத்தில் வச்சுக்கிட்டு எப்படி அரவிந்த் தூங்குவான்? அவளுக்கு மூட் கிரியேட் பண்ண களத்தில் இறங்கறான் அரவிந்த்.

டக்கு சிக்கு

டக்கு சிக்கு

அரவிந்த் ஒரு கதை சொல்லட்டுமான்னு தாமரையிடம் கேட்க, ரொம்ப பெரிய கதையான்னு அவள் கேட்க, இல்லை சின்ன கதைதான்னு சொல்றான் அரவிந்த். சொல்லுங்கன்னு தாமரை சொல்ல,, சோழ நாட்டுக்கு பக்கத்தில் அல்லி நகரம் இருந்தது.அது ஒரு அழகிய நகரம், அந்த நகரத்துக்கு போகணும்னு சோழ நாட்டு வீரன் ஆசைப்பட்டான். அப்போது டக்கு சிக்கு டக்கு சிக்குன்னு குதிரையில் போறான்னு சொல்லிட்டு தாமரையின் கையில் நண்டூருது நரியூருது என்பது போல அவள் கையில் விரலால் ஏறுகிறான்.

வீரன் வந்துட்டானா?

வீரன் வந்துட்டானா?

தாமரை பாதி கையில் ஏறியதும் வீரன் வந்துட்டானான்னு கேட்க, இல்லை..இப்போதுதான் ஊருக்குள்ள நுழைஞ்சு இருக்கான். இப்போ ஒரு அழகான சிலையை பார்த்துட்டான். அவள் கண்களைத் தொட்டு, அந்த சிலையின் கண்கள் எவ்வளவு அழகா இருக்குன்னு வியந்தான். .அப்படியே அவள் முகத்தைத் திருப்ப, ஏங்க லைட்டுன்னு சொல்ல, அவன் லைட்டை அணைத்துவிட்டு தாமரை அருகில் போகிறான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X