ஜெயா டிவியில் இயக்குநர் மகேந்திரனின் ஆல்பம்….

ஞாயிறுதோறும் மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் 'ஆல்பம்' நிகழ்ச்சியில் பிரபலங்கள் கலந்து கொண்டு தங்கள் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள், நெகிழ்ச்சியூட்டும் நினைவுகள், மறக்க முடியாத அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள்.
பிரபலங்கள் தங்களின் பல்வேறு காலகட்ட புகைப்படங்கள் மூலம் தங்கள் நினைவுகளை வெளிக்கொண்டு வருகிறார்கள். தங்களின் நடந்த சுவாரசிய சம்பவங்கள், மறக்க முடியாத அனுபவங்களையும் பட்டியலிடுகிறார்கள். அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் பலரும் கூட சுவையான நினைவுகளை பகிர்ந்து கொள்கின்றனர்.
இந்நிகழ்ச்சியில் முதல் விருந்தினராக நடிகர் சிவக்குமார் பங்குபெற்று தன் நினைவுகளை, பொக்கிஷங்களை பகிர்ந்து கொண்டார்.
சினிமா பிரபலங்கள் மட்டுமல்லாது கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், உள்ளிட்ட பலரும் பங்கு பெற்ற இந்த நிகழ்ச்சியில் நாளைய தினம் இயக்குநர் மகேந்திரன் பங்குபெறுகிறார்.
தனது மென்மையான படைப்புகள் மூலம் பேசப்பட்ட டைரக்டர் மகேந்திரன் அவரது மறக்கவியலாத கலைஅனுபவங்களை நெஞ்சம் நெகிழ நேயர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
மகேந்திரன் இயக்கிய ஒவ்வொரு படங்களும் இன்றைக்கும் காவியங்களாக பேசப்படுகின்றன. உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும், நண்டு, மெட்டி, உள்ளிட்ட அனைத்து படங்களுமே இன்றைக்கும் பார்க்கத்தூண்டக்கூடிய படங்கள்தான். அவரின் நினைவுகளை திரும்பிப் பார்ப்பது ரசிகர்களுக்கு தனி அனுபவம்தான். பெப்சி உமா இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.


Click it and Unblock the Notifications











