புருஷனோட சட்டை வாசனையும்.... பொண்டாட்டியோட புடவை வாசனையும்....!
சென்னை: விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியல் குடும்பத்தில் அண்ணன் தம்பி ,அக்கா தங்கையை கல்யாணம் செய்துக்கறாங்க
ரெண்டு பேர் கல்யாணமும் ஒரு விபத்து போல நடந்த கல்யாணம்தான். இப்போதுதான் அண்ணனும், அக்காவும் அதாவது முதல் தம்பதி கொஞ்சம் நெருங்க ஆரம்பிச்சு இருக்காங்க.
தம்பியும், தங்கையும் இன்னும் எலியும் பூனை மாதிரிதான் வாழ்ந்துகிட்டு இருக்காங்க. தங்கச்சி புருஷன் தினமும் குடிச்சுட்டு வந்து வம்பு இழுத்துகிட்டு இருக்கான்.

வெற்றி சட்டை பெட்டில்
வெற்றிக்கு கையில் அடிபட்டு, மலர்தான் அவனை கவனிச்சுக்கறா. இந்த நேரத்துல நான் குளிச்சுட்டு வரேன்னு சொல்லி,சட்டையை பெட்டில் கழற்றி போட்டுட்டு போறான். அந்த சட்டை மலரின் கவனத்தை ஈர்த்து சட்டையை எடுக்க சொல்லுது.

வெற்றி ஷர்ட் வாசம்
சட்டையை எடுத்து முகர்ந்து பார்க்கறா மலர். இப்போதான் முதன்முதலாஉங்க சட்டையை எடுத்து உங்க வாசம் பார்க்கிறேன்.. எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்குங்கன்னு சொல்லிக்கறா. என் புருஷன் சட்டைத்தானே போட்டுப் பார்த்தால் என்ன தப்புன்னு சட்டையயை எடுத்து போட்டுக்கறா.

மலர் சட்டையை
வெற்றியின் சட்டையை போட்டுக்கிட்ட மலர் அந்த சட்டையையே தன் புருஷன் வெற்றியா நினைச்சு கட்டிக்கறா. இப்படி அவர் என்னை கட்டிக்கிட்டா எவ்ளோ நல்லா இருக்கும்னு நினைக்க... அதுபடியே கனவு வருது.நீதானே உன்னை கட்டிக்கணும்னு நினைச்சே...அதான் வந்துட்டேன்னு சொல்றான்.

மலர் புடவை
மாடியில் குளிச்சுட்டு வந்த வெற்றியின் முகத்தில் அங்கு காய்ந்து கொண்டு இருந்த மலரின் புடவை படுது. அவனும் மலரின் வாசனையை முதலில் நுகர்வதில் காதலில் திளைக்கிறான்.புடவையை கன்னத்தில் வைத்து கண்மூடி ரசித்து, மலர் நம்மை கட்டிப் பிடிச்சுகிட்டா எப்படி இருக்கும்னு நினைக்க... அப்படியே கனவு வருது.

மலரையும் வெற்றியையும்
மலரையும் வெற்றியையும் பிரிக்கணும்...சேர விடக் கூடாதுன்னு திட்டம் போடறாங்க வேற்றியின் அம்மா,அக்காக்கள் ரெண்டு பேரும். கடைசியில் வெற்றி படிக்கும்போது காதலிச்ச அஞ்சலியை மறுபடியும் வெற்றி கூட சேர்த்து வைக்க அவளை நடுவுல விடணும்னு பேசிக்கறாங்க.
அது போலவே அஞ்சலியும் வீட்டுக்கு வர்றா.


Click it and Unblock the Notifications











