டிவிட்டரில் ட்ரென்ட்டாகும் #வெற்றிமகன்கவின்.. கொண்டாடும் ஆர்மியினர்! குழப்பத்தில் மக்கள்!

Recommended Video

Bigg Boss 3 Tamil - சூடு பிடித்த Bigg Boss பட்டிமன்றம்-

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவினை, வெற்றி மகன் கவின் என அவரது ரசிகர்கள் ட்ரென்ட் செய்து வருகின்றனர்.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலமான கவின் பங்கேற்றுள்ளார். அவர் பெண்களிடம் கடலை போடுவது, டைம் பாஸ்க்கு காதலிப்பது, சுயநலத்துக்காக காதலிப்பது என தனி ட்ராக்கில் சென்று கொண்டிருக்கிறார்.

4 பேரை காதலித்தால் பிரச்சனை வராது என்றுதான் நான்கு பேரையும் காதலித்தேன் என்றார். இதனை தவறு என்று கமலே கண்டித்தார்.

பட்ட பெயர்

பட்ட பெயர்

பெண்களின் உணர்வுகளோடு விளையாடும் கவினை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என சமூக வலைதளங்களிலும் எதிர்ப்பு குரல் எழுந்து வருகிறது. மற்றவர்களுக்கு பட்ட பெயர் வைப்பது, பின்னாடி இழிவாக கிண்டல் செய்வது என மோசமாக நடந்து வருகிறார்.

நயவஞ்சகன்

நயவஞ்சகன்

சேரன் குறித்து பின்னால் டிராமா அப்படி இப்படி என கேவலமாக பேசிவிட்டு முன்னால் நீங்க வாங்காத அவார்டா என புகழ்வது போல் நயவஞ்சகமாக நல்லவரை போல் நடித்து அவரை நாமினேட் செய்தார்.

டேமேஜ் ஆன கவின்

டேமேஜ் ஆன கவின்

ஏற்கனவே வெளியில் ஒரு காதலி இருக்கும்போது பிக்பாஸ் வீட்டில் இதுவரை 2 பேரை காதலித்துவிட்டார் கவின். கவினின் நடவடிக்கையால் அவரது பெயர் மொத்தமாக டேமேஜ் ஆகியுள்ளது.

காசு கொடுத்து செட்டப்

காசு கொடுத்து செட்டப்

இந்நிலையில் வெற்றி மகன் கவின் என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்ரென்ட்டாக்கி வருகின்றனர் அவரது ஆர்மியினர். இப்படி கவினை ட்ரென்ட்டாக்குவது, காசு கொடுத்துதான் செட் செய்யப்பட்ட ஆட்கள் என்றும் கூறப்படுகிறது.

வேற லெவல்

''வெற்றிமகன்கவின் நம்ம பிள்ளைங்க எல்லாம் பயங்கரம்... வேற லெவல் ட்ரென்டிங்." என்று கூறுகிறார் கவினின் இந்த ரசிகர்.

திட்டி தீர்க்கும் மக்கள்

திட்டி தீர்க்கும் மக்கள்

ஒரு பக்கம் கவின் ஆர்மியினர் அவரை புகழ்ந்து டிவிட்டி ட்ரென்ட்டாக்கி வருகின்றனர். மறுபக்கம் கவின் ஹேட்டர்ஸ் அவரின் தில்லாலங்கடி வேலைகளை வைரலாக்கி திட்டிதீர்த்து வருகின்றனர்.

ஹேஷ்டேக் மோசடி

இந்த பொழப்புக்கு நாலு தெருவுல பிச்ச எடுக்கலாம்.. வெறும் ஹேஷ்டேக்கை மட்டும் பலமுறை காப்பி பேஸ்ட் செய்து கவின் ஆர்மியினர் ட்ரென்ட் செய்வதை இந்த நெட்டிசன் இப்படி காரித்துப்பியுள்ளார்.

கவின் ஆர்மி கோல்மால்

கவின் ஆர்மி கோல்மால்

கவினை பாராட்டுபவர்களை விட திட்டுபவர்களே அதிகம் உள்ள நிலையில் அவர் பெயர் எப்படி ட்ரென்ட்டாகிறது என மக்கள் குழப்பமடைந்துள்ளனர். இதிலும் கவின் ஆர்மியினர் ஏதாவது கோல்மால் செய்திருப்பார்கள் என்றும் மக்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X