கமல் அந்த டாப்பிக்கையே கண்டுக்க மாட்டாரு.. பிரபல நடிகரால் ஏற்பட்ட சிக்கல்.. விசித்ரா கணவர் பேட்டி!

சென்னை: 20 வருஷத்துக்கு முன் நடந்த நிகழ்வை பிக் பாஸில் பூகம்பம் டாஸ்க் கொடுக்கவே ஓபன் செய்திருக்கிறார் விசித்ரா என்றும் அவரே பல ஆண்டுகளாக இதை மறந்து வாழ்ந்து வந்த நிலையில், எப்படி பர்ஸ்ட் அவுட் ஆனார் என்றே தெரியவில்லை எனக் கூறிய அவரது கணவர் ஷாஜி பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி அதிர்ச்சியை கிளப்பி உள்ளது.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இதுவரை இல்லாத அளவுக்கு சர்ச்சையான நிகழ்ச்சியாக இந்த சீசன் மாறியுள்ளது. நடிகர் கமல்ஹாசனையே புல்லி கேங்கில் சேர்த்து பிரதீப் ஆண்டனியை பெண் போட்டியாளர்கள் வெளியே அனுப்பி விட்டனர் என சர்ச்சை வெடித்தது.

Vichitra Husband reveals popular actor threatening and says Kamal Haasan never pick the topic too

மேலும், சமீபத்தில் குடிகார அங்கிள் என கமலை தான் பூர்ணிமா சொன்னதாக நெட்டிசன்கள் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், விசித்ரா கணவர் இதை பற்றியெல்லாம் கமல் கேட்கவே மாட்டார். அந்த டாபிக்கை அசால்ட்டாக கடந்து விடுவார் என ஆண்டவரையே அசிங்கப்படுத்தி உள்ளார்.

பிக் பாஸ் பூகம்பம்: பிக் பாஸ் சீசன் 7 இயக்குநர் சொல்லித் தான் பாலகிருஷ்ணா படத்தின் படப்பிடிப்பில் தனக்கு நேர்ந்த பழைய மோசமான அனுபவத்தை விசித்ரா வெளிப்படுத்தி உள்ளார் என நெட்டிசன்கள் விஜய் டிவியையும் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் ஒரு பக்கம் விளாசி வருகின்றனர். மேலும், மன்சூர் அலி கான் - த்ரிஷா விவகாரத்தை வைத்து இந்த வாரத்துக்கான கன்டென்ட்டை மாற்றி உள்ளனர் என்கிற குற்றச்சாட்டும் எழுந்தது. ஆரம்பத்தில் மாணவர்கள் தற்கொலை, அடுத்து பெண்களுக்கான பாதுகாப்பு என பல சர்ச்சைகள் வெடித்து வருகிறது.

விசித்ரா கணவர் ஓபன் ஸ்டேட்மென்ட்: பிரபல யூடியூப் சேனலுக்காக பிக் பாஸ் விமர்சகர் ஜோ மைக்கேல் நடத்திய நேர்காணலில் கலந்து கொண்டு பேசிய விசித்ரா கணவர் ஷாஜி அந்த சம்பவம் உண்மை தான் என்றும் தனது ஹோட்டலில் தான் அப்படியொரு பிரச்சனையை விசித்ரா சந்தித்த போது ஒரு மனிதனாக அவருக்கு உதவினேன். அதற்காக என்னிடமே அந்த நடிகரின் ஆட்கள் பிரச்சனையில் ஈடுபட்டனர். அதன் பின்னர் திருமணத்தின் போதும் கூட அந்த நடிகர் எனக்கு நேரடியாகவே மிரட்டல் விடுத்தார் என பாலகிருஷ்ணாவின் பெயரை சொல்லாமலே ஷாஜியும் அந்த பேட்டியில் பிரபல தெலுங்கு நடிகர் என்பதை மட்டுமே குறிப்பிட்டுள்ளார்.

கமல் கேட்கமாட்டார்: சினிமாவில் அப்போது இருந்த நடிகர் சங்க நிர்வாகிகள் யாருமே எங்களுக்காக குரல் கொடுக்க முன் வரவில்லை. போலீஸில் புகார் அளித்து பல வழக்குகளை சந்தித்தும் இந்த விவகாரத்தை விட்டு விடுங்க என்றே சமாதானம் செய்தனர். கமல்ஹாசன் நிச்சயமாக இந்த வாரம் அந்த டாப்பிக்கை அப்படியே கடந்து போய் விடுவார் என்றே ஷாஜி உறுதியாக கூறியுள்ளார். ஆனால், இந்த டாப்பிக்கை ஹைலைட் செய்து பேசியே கமல் அரசியல் மைலேஜ் தேடுவார் என ஜோ மைக்கேல் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X