பாலியல் சீண்டல்.. எல்லை மீறிய ரியாலிட்டி ஷோ.. இதுவே ஆண் செய்திருந்தால் எல்லோரும் பொங்கியிருப்பாங்க!

சென்னை: மக்கள் மத்தியில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பபடும் ரியாலிட்டி ஷோக்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு உள்ளது. அனைத்து மொழிகளிலும் ரியாலிட்டி ஷோக்களுக்கு நல்ல வரவேற்பு என்பது உள்ளது. அதேநேரத்தில் பல ரியாலிட்டி ஷோக்கள் மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது. பல ரியாலிட்டி ஷோக்கள் சமூக அக்கறையுடன் நடத்தப்படுகின்றது. சில ரியாலிட்டி ஷோக்கள் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சில ரியாலிட்டி ஷோக்களில் சில எப்பிசோட்கள் பரபரப்பை ஏற்படுத்திவிடும். அந்த வகையில் தெலுங்கில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ரியாலிட்டி ஷோவில் நடந்த சில விஷயங்கள் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

television

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் ரியாலிட்டி ஷோக்களில் பெரும்பாலும் சின்னத்திரை பிரபலங்களே பங்கேற்பார்கள். மேலும் சில நேரங்களில் படங்களின் புரோமோசனுக்காக வெள்ளித்திரை பிரபலங்களும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களை தேடி வருவதும் உண்டு. அந்த வகையில் தெலுங்கில் முன்னனி தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருக்கக் கூடிய தனியார் தொலைக்காட்சிச் சேனலில் கடந்த வாரத்தில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

television

அந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையில் போட்டி வைக்கப்பட்டது. அப்போது பலத்தினை நிரூபிக்கும் போட்டியில் ஆண்கள் அணியில் இருந்து ஒரு சின்னத்திரை பிரபலமும் பெண்கள் அணியில் இருந்து சின்னத்திரை பிரபலமும் வந்தனர். இருவருக்கும் இடையில் போட்டி தொடங்கியதும், பெண்கள் அணியில் இருந்த மற்றொரு சின்னத்திரை பிரபலம் நேரடியாக ஆண் போட்டியாளரிடம் வந்தார்.

television

பாலியல் சீண்டல்: வந்தவர், ஆண் போட்டியாளரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார் என்றுதான் கூறவேண்டும். காரணம் அந்த பெண் போட்டியாளரின் நடவடிக்கைகள் அப்படி இருந்தது. ஆண் போட்டியாளரின் கவனத்தை திசை திருப்ப, அவரைக் கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுக்க முயற்சி செய்வது, அவரது பாலியல் உணர்வைத் தூண்டுவதுபோல நடந்து கொள்வது என செய்து கொண்டு இருந்தார். இறுதியாக அந்தப் போட்டியில் பெண் போட்டியாளர் வெற்றி பெற்றார்.

கண்டனம்: இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. இதனைப் பார்த்த இணையவாசிகள் தொடங்கி பிரபலங்கள் வரை, இதுவே ஆண் செய்திருந்தால் என்ன ஆகியிருக்கும் இந்நேரம் அனைவரும் பொங்கியிருப்பார்கள். அந்த ஆண்மீது மாதர் சங்கம் வழக்கு தொடுத்திருக்கும். ஆண் போட்டியாளர் கைது செய்யப்பட்டிருப்பார். அவதூறுக்கும் ஆளாகியிருப்பார். ஆனால் பெண் போட்டியாளர் இவ்வாறு நடந்து கொண்டதால் அனைவரும் அமைதியாக உள்ளனர் எனக் காட்டமாக கருத்து தெரிவித்துவருகின்றனர். மேலும் சிலர், பெண்கள் இப்படித்தான் செய்வார்கள். அவர்கள் தங்களுக்கு காரியம் கைகூடவேண்டும் என்றால் இறுதியாக இப்படி மோசமாகவும் தரம் தாழ்ந்தும் நடந்து கொள்வார்கள் என கருத்து தெரிவித்து மொத்த பெண் சமூகத்தையும் வம்புக்கு இழுக்கின்றனர். இதற்கும் பலர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: reality show
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X