பிக் பாஸால் கமலுக்கு இப்படி ஒரு சோதனையா?

By Siva

Recommended Video

மஹத்துடன் பிரேக்கப் செய்த காதலி வெளியிட்ட வைரல் வீடியோ

சென்னை: பிக் பாஸால் கமல் ஹாஸனுக்கு இப்படி ஒரு சோதனை ஏற்பட்டுள்ளதே.

பிக் பாஸ் முதல் சீசனை அடுத்து இரண்டாவது சீசனையும் கமல் ஹாஸன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். முதல் சீசனிலேயே அவரை நிகழ்ச்சியை விட்டு விலகிவிடுமாறு பலரும் கோரிக்கை விடுத்தனர்.

இருப்பினும் அவர் இரண்டாவது சீசனை தொகுத்து வழங்க ஒப்புக் கொண்டார்.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

பிக் பாஸ் 2 வீட்டில் ஓவராக ஆடும் ஐஸ்வர்யா, மகத்தை கமல் ஹாஸன் தட்டிக் கேட்பார் என்று எதிர்பார்த்து வாராவாரம் ஏமாற்றமே மிச்சம். ஐஸ்வர்யா சும்மாவே மும்தாஜை தூற்றிக் கொண்டார், இதில் கமல் வேறு அவரை ஊக்குவிக்கிறார். கமல் ஐஸ்வர்யாவை கண்டிப்பார் என்று எதிர்பார்த்தபோது அவரை ஆதரித்ததை கண்டு பார்வையாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.

நம்பிக்கை

நம்பிக்கை

முதல் முறையாக பிக் பாஸ் 2 மேடையில் கமல் கோபப்பட்டு கோட்டை கழற்றி வீசி, சட்டை கையை மடக்கியதைப் பார்த்து செம ஆண்டவரே, இது இதை தான் எதிர்பார்த்தோம் என்று பார்வையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அந்த கோபம் போலி என்பது தெரிய வந்து நாம் எல்லாம் நொந்தது தனிக் கதை.

இந்தி பிக் பாஸ்

இந்தி பிக் பாஸ்

இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் சல்மான் கான் கோபப்பட்ட காட்சியை அப்படியே காப்பியடித்தது தெரிய வந்தது. போட்டியாளர்களை உண்மையாக இருக்குமாறு தொடர்ந்து கூறி வரும் கமல் ஹாஸனை கூட போலியாக கோபப்பட வைத்துவிட்டார்கள் என்பது தான் வருத்தம். கமல் எப்படி கோபப்படுவது போன்று நடிக்க ஒப்புக் கொண்டார் என தெரியவில்லை?

சந்தேகம்

சந்தேகம்

கோபத்தை காப்பியடித்த சம்பவத்திற்கு பிறகு பிக் பாஸ் 2 மேடையில் கமல் என்ன பேசினாலும் அது உண்மையா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. இதை கமல் பேசுகிறாரா, பிக் பாஸ் பேச வைக்கிறாரா என்ற எண்ணமே அடிக்கடி வருகிறது. கமல் ஐஸ்வர்யாவை கண்டிக்காமல் ஊக்குவிப்பதற்கு பின்னாலும் பிக் பாஸின் வேலை இருக்கிறது போன்று.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

மக்களுடன் அளவளாவவே பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒப்புக் கொண்டதாக கமல் தெரிவித்தார். அத்தகைய கமலின் கைகள், உணர்ச்சிகளை பிக் பாஸ் கட்டிப்போட்டு வைத்துவிட்டாரா? இப்படி அடங்கிப் போகிற ஆள் இல்லையே கமல். பிக் பாஸால், கமலை பார்வையாளர்கள் சந்தேகக் கண்ணுடன் பார்க்கும் பரிதாப நிலைமை ஏற்பட்டுவிட்டதே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X