பிக் பாஸ் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய விக்னேஷ் சிவன்
Recommended Video

சென்னை: பிக் பாஸ் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்த பார்க்கிறார் விக்னேஷ் சிவன்.
இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது 33வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர்.
முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான மகத்தும் விக்னேஷை வாழ்த்தினார்.
மகத்
பிறந்தநாள் வாழ்த்துக்கள் மச்சான் என்று வாழ்த்தி ட்வீட் போட்டிருந்தார் மகத். இதை பார்த்த விக்னேஷ் சிவனோ, நன்றி பிக் பாஸ் என்று பதில் ட்வீட் போட்டு அவரை கலாய்த்துள்ளார்.

பிக் பாஸ்
பிக் பாஸின் செல்லக்குட்டி ஐஸ்வர்யா தான் என்று பார்வைாயளர்கள், முன்னாள் போட்டியாளரான ஆர்த்தி ஆகியோர் கூறுகிறார்கள். ஆர்த்தி எல்லாம் ஐஸ்வர்யாவின் அம்மாவை பிக் பாஸ் மாமியார் என்றே நேரடியாக கூறிவிட்டார். பிக் பாஸ், ஐஸ்வர்யா பற்றி இப்படி ஒரு பரபரப்பான விஷயம் போய்க் கொண்டிருக்கும் போது குழப்பத்தை ஏற்படுத்த பார்க்கிறாரே விக்னேஷ் சிவன்.

யாஷிகா
மகத்தை பிக் பாஸ் என்றால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படாதா?. மகத்தே பாவம், பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது யாஷிகாவை காதலித்து பிரச்சனையில் சிக்கினார். வெளியே வந்த பிறகு தனது காதலி பிராச்சி மிஸ்ராவை சமாதானம் செய்து காதலை புதுப்பித்துள்ளார். இந்நிலையில் அவரை போய் பிக் பாஸ் என்றால் ஐஸ்வர்யா அவர் ஆளாகிவிட மாட்டாரா?

திருமணம்
காதலி நயன்தாராவுடன் ஊர், ஊராக சுற்றுவது எல்லாம் சரி. அவரை எப்பொழுது திருமணம் செய்யப் போகிறீர்கள் என்று ரசிகர்கள் அடிக்கடி விக்னேஷ் சிவனிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். நயன்தாரா இருக்கும் பிசியை பார்த்தால் இப்போதைக்கு திருமணம் நடக்காது போன்று. விக்னேஷ் சிவனின் புதுப்பட அறிவிப்பு குறித்தும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











