விஜய் விருது விழா: கமல், சிவகார்த்திகேயனுக்கு விருது…. நயன்தாரா சிறந்த நடிகை!

By Mayura Akilan

சென்னை: விஜய் தொலைக்காட்சி ஆண்டு தோறும் தமிழ் திரைப்பட கலைஞர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. தொலைக்காட்சி நேயர்களிடம் வாக்கெடுப்பு நடத்தி இந்த விருதுகளை வழங்குகிறது.

2013ம் ஆண்டுக்கான 8வது விருது வழங்கும் விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் சனிக்கிழமை பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த விழாவில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான், உலக நாயகன் கமல்ஹாசன், சூர்யா, விஜய், விஜய் சேதுபதி சிவகார்த்திக்கேயன், நயன்தாரா, நஸ்ரியா, என ஏராளமான திரை நட்சத்திரங்கள் பங்கேற்றனர். ஏ.ஆர்.ரஹ்மான், யுவன்சங்கர்ராஜா, அனிருத் உள்ளிட்ட பிரபல இசையமைப்பாளர்களும் பங்கேற்று சிறப்பித்தனர்.

விஜய் விருதுகள் வழங்கும் விழா மேடையில் வெள்ளித்திரை, சின்னத்திரை நட்சத்திரங்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நடிகைகள் ஹன்சிகா, காஜல் அகர்வால், சமந்தா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் மேடையில் நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். விருது பெற்றவர்களின் விபரங்களை மேற்கொண்டு படியுங்கள்

கமல், விஜய்

கமல், விஜய்

சிறந்த நடிகர் விருது கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது. மக்கள் விரும்பும் இயக்குநர் விருதும் விஸ்வரூபம் படத்திற்காக கமல் பெற்றார். இதையடுத்து மக்கள் விரும்பும் ஹீரோ (பேவரைட்) விருது தலைவா படத்திற்காக நடிகர் விஜய்க்கு வழங்கப்பட்டது.

நயன்தாரா, நஸ்ரியா, தன்ஷிகா

நயன்தாரா, நஸ்ரியா, தன்ஷிகா

சிறந்த நடிகைக்கான விருது ராஜா ராணி படத்திற்காக நயன்தாரா விற்கு வழங்கப்பட்டது. அதே படத்தில் நடித்த நஸ்ரியா சிறந்த அறிமுக நடிகையாக தேர்வு செய்யப்பட்டார். பரதேசி படத்தில் நடித்த தன்ஷிகாவிற்கு சிறந்த துணை நடிகை விருது வழங்கப்பட்டது.

ஆரம்பம், பரதேசி, தங்கமீன்கள்

ஆரம்பம், பரதேசி, தங்கமீன்கள்

சிறந்த படமாக தங்கமீன்கள் தேர்வு செய்யப்பட்டது. ரசிகர்களின் விருப்ப படமாக ஆரம்பம் தேர்வு செய்யப்பட்டது. சிறந்த இயக்குநர் விருது பரதேசி படத்திற்காக பாலாவிற்கு வழங்கப்பட்டது. சிறந்த புதுமுக இயக்குநர் விருதினை ராஜா ராணி இயக்குநர் அட்லி பெற்றார். அதேபோல சிறந்த ஒப்பனைக் கலைஞராக தசரன், சிறந்த ஆடை வடிவமைப்பாளராக பூர்ணிமாவும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் பரதேசி படத்திற்காக இந்த விருதினை பெற்றனர்.

கடல் படத்திற்கு பல விருதுகள்

கடல் படத்திற்கு பல விருதுகள்

சிறந்த வில்லன் நடிகர் விருதினை கடல் படத்திற்காக அர்ஜூன் பெற்றார். சிறந்த அறிமுக நடிகராக கடல் நாயகன் கவுதம் கார்த்திக் பெற்றார். சிறந்த ஒளிப்பதிவாளராக ராஜீவ் மேனன் தேர்வு செய்யப்பட்டார். சிறந்த நடனஇயக்குநராக பிருந்தா தேர்வு செய்யப்பட்டார். கடல் படத்திற்காக இவர்களுக்கு இந்த விருது கிடைத்துள்ளது.

ஏ.ஆர். ரஹ்மான்

ஏ.ஆர். ரஹ்மான்

சிறந்த இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டார். கடல் படத்திற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

பாரதிராஜா

பாரதிராஜா

சிறந்த துணை நடிகர் விருது பாண்டியநாடு படத்தில் நடித்த பாரதிராஜாவிற்கு வழங்கப்பட்டது.

சந்தானம்

சந்தானம்

சிறந்த நகைச்சுவை நடிகராக நடிகர் சந்தானம் தேர்வு செய்யப்பட்டார். பல படங்களில் நடித்ததற்கு அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது.

ஊதா கலரு ரிப்பன்

ஊதா கலரு ரிப்பன்

ரசிகர்களின் மனம் கவர்ந்த பாடலாக ஊதா கலரு ரிப்பன் தேர்வு செய்யப்பட்டது.

யுவன் சங்கர் ராஜா

யுவன் சங்கர் ராஜா

சிறந்த பாடகராக யுவன்சங்கர் ராஜாவும், சிறந்த பாடகியாக சக்தி ஸ்ரீயும் தேர்வு செய்யப்பட்டனர்.

சிவகார்த்திக்கேயன்

சிவகார்த்திக்கேயன்

சிறந்த பொழுதுபோக்கு நடிகராக சிவகார்த்திகேயன் தேர்வு செய்யப்பட்டார். ஸ்பெஷல் ஜூரி அவார்ட் விஜய்சேதுபதிக்கு வழங்கப்பட்டது. அதேபோல ஸ்பெஷல் ஜூரி அவார்ட் டீம் சூதுகவ்வும் படத்திற்கு கிடைத்துள்ளது.

ஷாருக்கான், இயக்குநர் ஷங்கர்

ஷாருக்கான், இயக்குநர் ஷங்கர்

இயக்குனர் ஷங்கருக்கு செவாலியே சிவாஜி கணேசன் விருதும். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஷாருக்கானுக்கு சிறந்த பொழுதுபோக்காளர் விருதும் வழங்கப்பட்டது..

டிடி, கோபிநாத்

டிடி, கோபிநாத்

விருது விழா நிகழ்ச்சிகளை தொகுப்பாளினி டிடியும், நீயா நானா கோபிநாத்தும் தொகுத்து வழங்கினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X