விஜய் விருது விழாவிற்கு போட்டியாக சன் டிவியில் 'சிங்கம் 2'

By Mayura Akilan

விஜய் டிவியில் விருது விழா வரும் ஞாயிறு மதியம் 2.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. அதே நேரத்தில் சன்டிவியில் சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா நடித்த சிங்கம் 2 திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.

தமிழ்த் திரைப்படத் துறையினருக்கான விஜய் விருதுகள் வழங்கும் விழா கடந்த 5ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. 2013ம் ஆண்டில் சாதனை புரிந்த தங்களது திறமையை சிறப்பாக வெளிப்படுத்திய நட்சத்திரங்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

பிரம்மாண்டமான அரங்கில் முன்னணி நட்சத்திரங்களின் நேரடி ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் மிகச் சிறப்பாக நடைபெற்ற விழாவை திவ்யதர்ஷினி, மற்றும் கோபிநாத் தொகுத்து வழங்கினர்.

அசத்தலான நடனம்

அசத்தலான நடனம்

நடிகைகள் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, வாணி கபூர், ராய் லட்சுமி, அனிருத் மற்றும் பலரின் அசத்தலான நடனங்கள் விழாவில் இடம் பெற்றது.

நட்சத்திர பட்டாளங்கள்

நட்சத்திர பட்டாளங்கள்

நடிகர்கள் கமல்ஹாசன், ஷாரூக்கான், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, நானி, சந்தானம், கார்த்திக், கௌதம் கார்த்திக், பிரபு, விக்ரம் பிரபு, ஜெயராம், அர்ஜுன், அசோக் செல்வன், அருண் விஜய், ரமேஷ் அரவிந்த், தினேஷ், பங்கேற்றனர்.

கலக்கல் நடிகைகள்

கலக்கல் நடிகைகள்

நடிகைகள் நயன்தாரா, ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, குஷ்பு, பூஜா குமார், நஸ்ரியா, மாளவிகா, பூஜா, வாணி கபூர், ரம்யா கிருஷ்ணன், பூர்ணிமா பாக்யராஜ், பிரியா ஆனந்த், தன்ஷிகா, ஆகியோர் விதவிதமான உடைகளில் உற்சாகமாக பங்கேற்றனர்.

இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள்

இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள்

இயக்குனர்கள் ஷங்கர், பாலா, பாரதிராஜா, லிங்குசாமி, ராம், பார்த்திபன், நளன் குமாரசாமி, இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரகுமான், யுவன்ஷங்கர் ராஜா, அனிருத், சந்தோஷ் நாராயணன், நடன இயக்குனர்கள் பிருந்தா, காயத்ரி ரகுராம், எடிட்டிர் ஆண்டனி உள்ளிட்ட ஏராளமான திரையுலகப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

ஞாயிறு ஒளிபரப்பு

ஞாயிறு ஒளிபரப்பு

இந்த விஜய் விருதுகள் வழங்கும் விழாவின் முதல் பாகத்தை வரும் ஞாயிறு 20ம் தேதி மதியம் 2 மணிக்கும், இரண்டாம் பாகத்தை அடுத்த ஞாயிறு (ஜூலை 27ஆம் தேதி) மதியம் 2 மணிக்கும் ஒளிபரப்புகிறது விஜய் டிவி.

சன்டிவி போட்டி

சன்டிவி போட்டி

ரசிகர்களின் கவனத்தை திரைதிருப்பும் வகையில் வரும் ஞாயிறு மதியம் சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா நடித்த சிங்கம் 2 திரைப்படம் சன்டிவியில் ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு வாரமும் புது திரைப்படங்களுக்குப் போட்டியாக அதே நடிகர்கள் நடித்த திரைப்படங்களை ஒளிபரப்புவது சேனல்களின் வாடிக்கை. ஆனால் இந்த வாரம் விருது நிகழ்ச்சிக்கு போட்டியாக புதிய திரைப்படத்தை ஒளிபரப்புகிறது சன்டிவி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X