“மெர்சல் சர்ச்சை மாதிரி இதையும் சமாளிக்க நினைத்தாரா?” விஜயை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்.. குவியும் கமெண்ட்ஸ்
சென்னை: நடிகர் விஜய் கடந்த சில நாட்களாக தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வரும் நிலையில், தற்போது அந்த விவகாரத்தை கிண்டல் செய்யும் வகையில் திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் Blue Sattai Maran வெளியிட்ட பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மெர்சல் சர்ச்சையை நினைவுபடுத்திய பதிவு
ப்ளூ சட்டை மாறன் தனது பதிவில் 2017ஆம் ஆண்டு வெளியான Mersal படத்தைச் சுற்றி ஏற்பட்ட சர்ச்சையை நினைவுபடுத்தியுள்ளார். மெர்சல் படம் மூலம் பேமஸ் ஆகலாம் என்று நினைத்து அந்த நேரத்தில், விஜயை "ஜோசப் விஜய்" என்று குறிப்பிட்டு விமர்சித்தது பெரிய விவாதமாக மாறியது. அதற்கு பதிலாக விஜய் தனது லெட்டர் பேடில் "ஜோசப் விஜய்" என்று கையொப்பமிட்டு, "என் பெயரை வைத்து யாரும் தேவையில்லாத கிசுகிசு கிளப்ப வேண்டாம்" என்ற வகையில் மறைமுகமாக பதில் அளித்தார்.
அந்த நேரத்தில் ரசிகர்களும் பொதுமக்களும் விஜய்க்கு ஆதரவாக நின்றனர். அந்த நடவடிக்கை அவருக்கு பெரிய ஆதரவை பெற்றுத்தந்ததாகவும் கூறப்படுகிறது.
அதே தந்திரம்
இந்த சம்பவத்தை குறிப்பிட்ட ப்ளூ சட்டை மாறன், தனது பதிவில், "அந்த விஷயத்தில் மக்கள் பாராட்டினார்கள். அதனால் இப்போதும் அதே மாதிரி நடந்தால் மக்கள் சந்தேகங்கள் எல்லாம் மறைந்து போய்விடும் என்று விஜய் நினைத்திருக்கலாம். ஆனால் இந்த விஷயத்தில் ஒரு சிறிய தவறு நடந்துவிட்டது" என்று குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











