Don't Miss!
- News
துரோகம், பதவி வெறி, சுயநலம்.. எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.. டிடிவி தினகரன்!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Technology
விஷத்தை வெளியேற்றுகிறதா வாட்டர் ஹீட்டர்கள்? பகீர் நிகழ்வால் மக்கள் பீதி.! உண்மை என்ன?
- Lifestyle
உங்க மார்பகங்களில் இந்த அறிகுறிகள் இருந்தா? அது மார்பக புற்றுநோயா கூட இருக்கலாமாம்...ஜாக்கிரதை!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
பிக் பாஸ் வீட்டில் நடிகர் விஜய்.. போட்டியாளர்கள் ஹேப்பி அண்ணாச்சி!
Recommended Video

சென்னை: நோட்டா பட விளம்பரத்திற்காக பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார் நடிகர் விஜய் தேவர்கொண்டா.
பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி நாளையுடன் நிறைவடைய இருக்கிறது. டைட்டிலை வெல்லப்போவது யார் என்ற ஆவல் பார்வையாளர்களிடம் அதிகமாக உள்ளது.

தற்போது பிக் பாஸ் வீட்டில் ரித்து, ஐஸ், விஜி மற்றும் ஜனனி என நான்கு போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். நேற்று பழைய போட்டியாளர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து பிக் பாஸ் வீட்டிற்கு வந்து ஆடிப்பாடி, விருந்து சாப்பிட்டு சென்றனர்.
இந்நிலையில், இன்று பிக் பாஸ் வீட்டிற்கு ஒரு நடிகர் விருந்தினராக வந்திருக்கிறார். அவர், அர்ஜூன் ரெட்டி மூலம் பிரபலமான நடிகர் விஜய் தேவர்கொண்டா.
தமிழில் இவர் நோட்டா என்ற படம் மூலம் அறிமுகமாகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்பட புரோமோசனுக்காகவே அவர் பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருப்பார் எனத் தெரிகிறது.
அதிக போட்டியாளர்களுடன் கலகலப்பாக இருந்த வீட்டில் தற்போது நான்கு போட்டியாளர்கள் மட்டுமே இருப்பதால் பிக் பாஸ் வீடு அமைதியாக இருக்கிறது. இது போன்ற விருந்தினர்களின் வருகையால் மட்டுமே வீடு கலகலப்பாக மாறுகிறது.
அந்தவகையில், விஜயின் வருகை போட்டியாளர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.