என்னது சினிமா பார்க்க இம்புட்டு செலவா.. பாண்டியன் -கோமதியை அதிர்ச்சிக்குள்ளாக்கிய புது மருமகள்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடும் சிறப்பாகவே காணப்பட்டது. மீனா மற்றும் செந்தில் இருவரும் சென்னைக்கு கிளம்ப தயாராகின்றனர். சென்னையில் மீனா ட்ரெய்னிங்கில் இருக்கும்போது செந்தில் ஹோட்டலில் சும்மா தானே இருக்க வேண்டும் என்று கூறும் பாண்டியன், அவருக்கு சென்னையில் முடிக்க வேண்டிய பல வேலைகளை அடுக்குகிறார்.

இதனிடையே பாண்டியன் வீட்டிற்கு வரும் தங்கமயிலின் அம்மா, செந்தில் மற்றும் மீனாவை சென்னைக்கு அனுப்புவதை போல சரவணன் -தங்கமயிலையும் எங்காவது வெளியில் அனுப்பி வையுங்கள் என்று கூற, அவர்கள் இருவரையும் சினிமாவிற்கு சென்று விட்டு வருமாறு பாண்டியன் கூறுவதாக இன்றைய எபிசோடு காணப்படுகிறது.

Television Pandian stores 2 serial Vijay tv 2

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் துவங்கி சில மாதங்களே ஆன நிலையில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து முன்னணி சீரியல்களின் வரிசையில் இடம் பெற்றுள்ளது. இந்த சீரியலின் குடும்ப பாங்கான கதைக்களம் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது. சீரியலில் பாண்டியன் -கோமதி தம்பதி, அவர்களின் மகன்கள், மகள்கள் கோமதியின் வில்லத்தனமான அண்ணன்கள் என அடுத்தடுத்த கேரக்டர்களை கொண்டு இந்த சீரியலின் கதைக்களம் அமைந்துள்ளது. தற்போது பாண்டியனின் மூத்த மகன் சரவணனின் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

போலி நகையுடன் வந்த தங்கமயில்: ஏழை வீட்டு பெண்ணாக இருந்த போதிலும் பணக்கார ஜம்பத்துடன் அடுத்தடுத்து காய்களை நகர்த்தி தங்கமயில் திருமணத்தை முடித்துள்ளார் அவரது அம்மா பாக்கியம். எண்பது சவரன் நகைகள் போடுவதாக அவர் கூறிய நிலையில் அவை அனைத்துமே போலினவை என்பது தெரியாமல் பாண்டியன் மற்றும் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது வீட்டிற்குள் திருடன் நுழைந்த நிலையில் அனைவரது நகைகளையும் கோமதியின் லாக்கரில் சென்று வைக்கக் கூறுகிறார் பாண்டியன். இதனால் தங்கமயில் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானார். தன்னுடைய நகைகளை உரசிப் பார்த்தால் உண்மை நிலை தெரிந்து விடுமே என்று அவர் யோசித்த நிலையில் அது குறித்து தொடர்ந்து அனைவரிடமும் கேட்பதாக காட்சிகள் காணப்பட்டன.

பாண்டியன் வைத்த ஆப்பு: பேங்க் லாக்கரில் வைக்கும் நகைகளை யாரும் உரசிப் பார்க்க மாட்டார்கள் என்று அவருக்கு ராஜி உள்ளிட்டவர்கள் கூறியவுடன் தான் தங்கமயிலுக்கு நிம்மதி ஏற்படுகிறது இந்நிலையில் மீனா மற்றும் செந்தில் இருவரும் மீனாவின் அலுவலக வேலையாக சென்னை செல்லவுள்ளனர். அங்கு இரு தினங்கள் சந்தோஷமாக கழிக்க செந்தில் மற்றும் மீனா இருவரும் திட்டங்கள் தீட்டிய நிலையில், அதற்கு பாண்டியன் ஆப்பு வைப்பதாக காணப்படுகிறது. செந்தில் சென்னையில் முடித்துவிட்டு வரவேண்டிய பல வேலைகளை அடுக்குகிறார். இதனால் செந்தில் மனம் வாடுகிறார்.

சினிமாவிற்கு 1200 செலவு: இந்நிலையில் பாண்டியன் வீட்டிற்கு வரும் தங்கமயிலின் அம்மா பாக்கியம், மீனா மற்றும் செந்திலை சென்னைக்கு அனுப்பி வைப்பதை போல தங்க மயில் - சரவணனையும் வெளியில் அனுப்பி வையுங்கள் என்று கூறுகிறார். இதற்கு ஓகே சொல்லும் பாண்டியன், அவர்கள் இருவரையும் சினிமாவிற்கு சென்று வர சொல்கிறார். தானே டிக்கெட் வாங்கி கொடுப்பதாகவும் அவர் கூறுகிறார் ஆனால் தங்கமயில் தற்போது ஆன்லைனிலேயே டிக்கெட்டை புக் செய்து கொள்ளலாம் என்று கூறி, அவடமிருந்து மொபைலை வாங்கி புக் செய்கிறார். தொடர்ந்து 1200 ரூபாய்க்கு டிக்கெட்டை புக் செய்கிறார்.

அதிர்ச்சியில் பாண்டியன் -கோமதி: இதனால் பாண்டியனுக்கு அதிர்ச்சியுடன் கதி கலங்குகிறது. ஆனாலும் தங்கமயில் அம்மா முன்னிலையில் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் காணப்படுகிறார். ஆனாலும் பின்னாடி சென்று புலம்புகிறார். டிக்கெட் விலை, எக்ஸ்ட்ரா சார்ஜஸ், பாப்கார்ன், ஜூஸ் மற்றும் சிப்ஸ் என இவ்வளவு செலவானதாக தங்கமயில் அடுக்குகிறார். பாண்டியன் புலம்பலை காட்டிலும் கோமதியின் புலம்பல் மிகவும் அதிகமாக காணப்படுகிறது. அந்த 1200 ரூபாய் இருந்திருந்தால் தான் ஒரு வார காலத்திற்கு குடும்பத்தை நிர்வகிப்பேன் என்றும் 20 கிலோ அரிசி மூட்டை வாங்கி போட்டிருப்பேன் என்றும் பலவாறாக அவர் புலம்புவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X