35 வயசாகுது.. திருமணம் செய்துக் கொள்ளாத விஜய்யின் ரீல் தங்கை.. திருவண்ணாமலையில் சாமி தரிசனம்!
சென்னை: விஜய், சூர்யா நடித்த நேருக்கு நேர் படத்திலேயே குழந்தை நட்சத்திரமாக நடித்த நான்ஸி ஜெனிஃபர் மீண்டும் விஜய்யுடன் இணைந்து தங்கையாக கில்லி படத்தில் நடித்து பிரபலமானார். குழந்தைப் பருவத்தில் இருந்தே சினிமாவில் நடித்து வந்த ஜெனிஃபருக்கு 35 வயதாகும் நிலையில், இன்னமும் திருமணம் செய்துக் கொள்ளாமல் சிங்கிளாகவே வாழ்ந்து வருகிறார்.
திருவண்ணாமலைக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற நிலையில், அங்கே எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.

சினிமா மற்றும் சின்னத்திரை என நடித்துக் கொண்டிருந்த நான்ஸி ஜெனிஃபர் சமீப காலமாக தொழில் செய்வதில் அதிக ஈடுபாட்டுடன் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
அரிசிமூட்டை: நான்ஸி ஜெனிஃபர் என்று சொன்னால் கூட யாரு இவங்கன்னு நினைக்கும் ரசிகர்களுக்கு கில்லி அரிசிமூட்டை என்று சொன்னதுமே விஜய்க்கு ரீல் தங்கையாக நடித்த ஞாபகம் உடனடியாக வந்துவிடும். நான்ஸி ஜெனிஃபர் ஆரம்பத்தில் முரளி நடித்த கிழக்குக் கரை படத்தில் நடித்து அறிமுகமானார். அதன் பின்னர் இதுதாண்டா சட்டம், தாயகம், சக்தி, நேருக்கு நேர், உளவுத்துறை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கில்லி படத்துக்குப் பிறகு பிப்ரவரி 14, உனக்கும் எனக்கும், ஜாம்பவான், தோழா, தீயா வேலை செய்யணும் குமாரு, கூட்டத்தில் ஒருவன் மற்றும் கடைசியாக ட்ரிப் படத்தில் நடித்திருந்தார்.
திருவண்ணாமலையில் சாமி தரிசனம்: கிறிஸ்துவ பெண்ணாக இருந்தாலும் நான்ஸி ஜெனிஃபர் இந்துக் கோயில்களுக்கு செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். திரைப்படங்கள் மற்றும் சீரியல்களிலும் இந்து பெண்ணாக பல படங்களில் நடித்துள்ள நான்ஸி ஜெனிஃபர் தற்போது திருவண்ணாமலைக்குச் சென்று சாமி தரிசனம் செய்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
திருமணமே செய்துக்கொள்ளவில்லை: நான்ஸி ஜெனிஃபருக்கு 35 வயதாகிறது. ஆனால், கில்லி படத்தில் நடித்த த்ரிஷா போல இவரும் இன்னமும் திருமணம் செய்துக் கொள்ளாமல் சிங்கிளாகவே வாழ்ந்து வருகிறார். கடந்த ஆண்டு கில்லி படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், தியேட்டர்களுக்குச் சென்று ரசிகர்களுடன் அந்த படத்தை பார்த்து கொண்டாடிய போது, திருமணத்தின் மீதெல்லாம் தனக்கு பெரிதாக ஆர்வமே இல்லை என்று சில யூடியூப் சேனல்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.
மீண்டும் நடிக்கணும்: தாயுமானவன், கேளடி கண்மணி, சித்தி 2 உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்த ஜெனிஃபர் 2021ம் ஆண்டுக்குப் பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டதை போலவே டிவி தொடர்களில் நடிப்பதையும் நிறுத்திக் கொண்டார். ஆனால், நீங்க மீண்டும் நடிக்கணும் என தொடர்ந்து ரசிகர்கள் அவருக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











