என்னங்க பயமா இருக்கா? இனி பயங்கரமா இருக்கும் - விஜய் படத்தை காப்பியடித்த அடுத்த சீரியல்!

சென்னை : சீரியல்கள் மூலம் அனைத்து சேனல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

இந்தப் போட்டியில் பெரிய சேனல்கள், வளர்ந்து வரும் சேனல்கள் என அனைத்தும் போட்டியில் உள்ளன.

மேலும் இந்தத் தொடர்களில் ரசிகர்களை கவரும்வகையில் வித்தியாசமான கதைக்களங்களை புகுத்த அனைத்து தொடர்களும் தொடர்ந்து முயன்று வருகின்றன.

வரவேற்பை பெறும் சீரியல்கள்

வரவேற்பை பெறும் சீரியல்கள்

ஒவ்வொரு சேனலிலும் நிகழ்ச்சிகளுக்கு இணையான வரவேற்பை சீரியல்களும் பெற்று வருகின்றன. சேனல்களும் போட்டிப் போட்டு கொண்டு வித்தியாசமான சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன. இதன்மூலம் அந்தந்த சேனல்களுக்கு டிஆர்பி அதிகரித்து வருகிறது. இதைநோக்கியே சேனல்கள் திட்டமிட்டு வருகின்றன.

ரசிகர்களை கவரும் தொடர்கள்

ரசிகர்களை கவரும் தொடர்கள்

அந்த வகையில் விஜய் டிவி, சன் டிவி உள்ளிட்ட சேனல்களுக்குள்தான் அதிகமான போட்டி நிலவி வருகிறது. இந்த போட்டியில் தற்போது ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் உள்ளிட்ட சேனல்களும் இணைந்துள்ளன. இந்த சேனல்களின் தொடர்களும் நிகழ்ச்சிகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

கண்ட நாள் முதல் தொடர்

கண்ட நாள் முதல் தொடர்

அந்த வகையில் கலர்ஸ் தமிழில் தினந்தோறும் இரவு 8.30 மணிக்கு திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பாகி வருகிறது கண்ட நாள் முதல். ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்துவரும் இந்தத் தொடரில் தற்போது விஜய்யின் என்னங்க பயமா இருக்கா இனிமேதான் பயங்கரமா இருக்கும் என்ற டயலாக் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கடத்தல் காட்சிகள்

கடத்தல் காட்சிகள்

மேலும் கோயில் ஒன்றில் ஏராளமான குழந்தைகள் மற்றும் பெண்கள் கடத்தப்பட்டிருப்பதாகவும், அவர்களுள் ஒருவராக இருக்கும் கான்ஸ்டபள் குமரன் அவர்களை துவம்சம் செய்வாகவும் கதை நகர்கிறது. பீஸ்ட் படத்தில் இதேபோல தீவிரவாதிகளிடம் சிக்கும் பொதுமக்களை விஜய் காப்பாற்றுவதாக கதை நகரும்.

விஜய் பட காட்சிகள்

விஜய் பட காட்சிகள்

அதே கான்செப்டை தற்போது கண்ட நாள் முதல் சீரியலிலும் அப்படியே பயன்படுத்தியுள்ளது. விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடரிலும் இதேபோல பீஸ்ட் படத்தின் காட்சிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதையே தற்போது கண்ட நாள் முதல் சீரியலிலும் பயன்படுத்தியுள்ளனர்.

சீரியல்களின் சினிமா காட்சிகள்

சீரியல்களின் சினிமா காட்சிகள்

சீரியல்களின் அடுத்தடுத்த வித்தியாசமான காட்சிகளை கொடுக்க வேண்டியது அவசியம்தான். இந்த பயணத்தில் போட்டியும் அதிகமாக காணப்படுகிறது. ரசிகர்களை கவர்வதற்காக இப்படி பிரபல ஹீரோவின் சினிமா காட்சிகளை கொஞ்சம்கூட நியாயமே இல்லாமல் பயன்படுத்துவது எப்படி நியாயமாகும் என்பதே ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

குறைந்ததா கற்பனை வளம்?

குறைந்ததா கற்பனை வளம்?

இந்த சீரியல்களின் இயக்குநர்களுக்கு கற்பனை வளம் குறைந்து விட்டதா அல்லது பிரபல நடிகரின் பிரபல காட்சிகளை பயன்படுத்துவதால் சீரியல் உடனடியாக ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் என்று அவர்கள் நினைக்கிறார்களா என்பது குறித்து தெரியவில்லை. ஆனாலும் இத்தகைய காட்சிகளை ரசிகர்கள் ரசிப்பார்களா என்பது கேள்விக்குறியே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X