»   »  குடியரசு தின விழா சிறப்பு திரைப்படம்: ஜெயா டிவியில் கத்தி

குடியரசு தின விழா சிறப்பு திரைப்படம்: ஜெயா டிவியில் கத்தி

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய் நடித்த கத்தி திரைப்படம் குடியரசு தினவிழா நாளன்று ஜெயா டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இது தொடர்பான முன்னோட்டங்கள் தற்போது ஒளிபரப்பாகி வருகின்றன.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய கத்தி திரைப்படம் பெரும் போராட்டத்திற்குப் பின்னர் கடந்த அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆனது. படத்திற்கு வந்த எதிர்ப்பை அடுத்து பிரபல சேனல்கள் எதுவும் அதன் சேட்டிலைட் ஒளிபரப்பு உரிமையை வாங்கவில்லை.

இதனையடுத்து ஜெயாடிவிக்கு கத்தி படத்தின் சேட்டிலைட் உரிமம் விற்பனை செய்யப்பட்டது. நூறு கோடிக்கு மேல் வசூல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

ஆனால் கத்தி படத்தினால் 30 கோடி ரூபாய் நஷ்டம் என்று இப்போது தகவல்கள் பரவி வருகின்றன. அது வேறு விசயம்.

கத்தி படம் பொங்கல் தினத்தன்று ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும் என் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குடியரசு தினத்தன்று ஒளிபரப்பாக உள்ளதாக தற்போது அந்த டிவியில் முன்னோட்டம் போடுகின்றனர்.

சன், விஜய், கலைஞர் டிவிகளில் ஒளிபரப்பாகும் படங்களைப்பற்றி இன்றும் ஒரு சில தினங்களில் தெரியவரும்.

English summary
Kathi movies will telecast on January 26 on Jaya TV.
Please Wait while comments are loading...