ஆண்கள் முன் குனிந்து எசகுபிசகான போஸ்.. தப்பாக பேசிய விஷால்.. வார்னிங் கொடுத்த விஜய்சேதுபதி!

சென்னை: பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி மிகவும் காரசாரமாக இருந்தது எனலாம், சத்யா, விஷால், தீபக் என அனைவரையும் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிவிட்டார். இதில், விஷாலுக்கு வார்னிங் கொடுத்த விஜய் சேதுபதி. ஒரு பெண் போட்டியாளர் பற்றி தப்பா கமெண்ட் பண்ணி இருக்கீங்க, நீங்க ஒண்ணும் தெருமுனைல உக்காந்து பேசல. ஞாபகம் வெச்சுக்கங்க என்று கோவத்தோடு பேசி இருந்தார். அந்த பெண் போட்டியாளர் யார் என்பதை இதில் பார்க்கலாம்.

பிக் பாஸ் நேற்றைய நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது மிகவும் அமைதியாகத்தான் சென்றது. ஆனால், போகப்போக ஆண்கள் டீமை விளாசு விளாசு என்று விளாசினார் விஜய் சேதுபதி. முதலில் கதை சொல்லும் டாஸ்க் குறித்து ஒவ்வொருத்தரிடமும் அவர்களின் அபிப்ராயத்தை கேட்டார். அப்போது, விஜய் சேதுபதி, ஜாக்குலினின் கதை என்னை மிகவும் பாதித்தது. ஐந்து வயதில் அப்பா இல்லாததை நினைக்கும் போதே கஷ்டமாக இருக்கிறது என்றார்.

bigg boss tamil vijay sethupathi vishal

பிக் பாஸ் சீசன் 8: இதைத்தொடர்ந்து விசாரணையை தொடங்கிய விஜய் சேதுபதி, விளையாட்டின் போது தீபக்கை சவுந்தர்யா தொட்டது குறித்து விவாதம் வந்தது. அப்போது பேசிய சௌந்தர்யா சார், விளையாட்டில் இருந்த சுவாரசியத்தில் தான் தீபக்கை தொட்டேன், ஆனால் அதற்கு அவர் மேனர்ஸ் இருக்கானு பேசினார் அது கஷ்டமாக இருந்தது என்றார். அப்போது பேசிய, தீபக், என் உடல்.. என் உரிமை.. இதையே ஒரு ஆண் பெண்ணிடம் செய்திருந்தால் ஓகேவா என்று விதாண்டாவாதமாக பேசினார். விஜய்சேதுபதியின் அட்வைஸையும் அவர் மதிக்கவே இல்லை.

நாகரிகம் கருதி சொல்லல: அதன்பின் பிரேக் சென்று வந்த விஜய்சேதுபதி, சௌந்தர்யா தாவணி கட்டிக்கொண்டு தரையில் அமர்ந்து தன் எதிர்ப்பை காட்டியதை சத்யா ஒருமாதிரி இருந்ததாக பேசியது குறித்து, அவர் தப்பாக அமர்ந்து இருந்தால் அவரிடமே சொல்லி இருக்கலாமே என்று கேள்வி கேட்டு சத்யாவை திக்கு முக்காடவைத்தார்.

இதைத்தொடர்ந்து விஷால் பக்கம் வந்த விஜய்சேதுபதி, 24x7ல் நீங்க ஒரு பெண் போட்டியாளரை பத்தி மோசமா கமென்ட் பண்ணியிருக்கீங்க. நாகரிகம் கருதி அதைச் சொல்ல நான் விரும்பல. நீங்க ஒண்ணும் தெருமுனைல உக்காந்து பேசல. ஞாபகம் வெச்சுக்கங்க என்று முறைப்பாகப் பேசினார். அதன் பின் விஷால் சாரி சார் என்று சொல்ல, சாரி எனக்கு சொல்லாதீங்க, நீங்க யாரை பத்தி பேசுனீங்கனு உங்களுக்கு தெரியும் அவங்ககிட்ட சாரி கேளுங்க, நீங்கள் இந்த மாதிரி பேசியது ரொம்ப தப்ப என்று எச்சரித்தார்.

குனிந்து எசகுபிசகான போஸ்: விஜய் சேதுபதி, இவ்வளவு கோவத்தோடு விஷாலுக்கு வார்னிங் கொடுத்ததை தொடர்ந்து, விஷால் யாரை படுமோசமான விமர்சித்தார் என்று இணையவாசிகள் ஒரு ஆராய்ச்சியே செய்துவிட்டார்கள்.அதில், விஷால், அருண், தீபக், சத்யா, ராணவ் என அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்க, அப்போது விஷால், இந்த சௌந்தர்யா, பீம் பேகில் காலை தூக்கி ரஞ்சித் சார் பக்கத்தில் வைத்துக்கொண்டு, ஜெப்ரி மேல படுத்துக்கிட்டு இருக்கா. அதுமட்டும் இல்லாமல் முத்துவின் முன்னால் குனிந்து எசகுபிசகான போஸில் பேசுகிறார் இதெல்லாம் என்ன பழக்கம், இது சௌந்தர்யா வாண்டடாக செய்கிறார் என்று பேசி இருந்தார். இதற்கு தான் விஜய் சேதுபதி விஷாலுக்கு வார்னிங் கொடுத்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X