டல் அடிக்கும் தமிழ் பிக்பாஸ்.. தெலுங்கு பிக்பாஸில் விஜய் சேதுபதி பார்த்து விட்ட வேலை.. அடடே பிரமாதம்!

சென்னை: பிக்பாஸ் சீசன் 9 என்பது தமிழ் மற்றும் தெலுங்கில் தொடங்கி வெகு விமர்சையாக சென்று கொண்டுள்ளது. இதில் தமிழ் சீசன் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே தெலுங்கு சீசன் தொடங்கி விட்டது. இப்படி இருக்கும்போது தெலுங்கு சீசனில் வைல்ட் - கார்ட் ரவுண்ட் மூலம் போட்டியாளர்கள் வீட்டிற்குள் அனுப்பும் அளவுக்கு போட்டி பரபரப்பாக சென்று கொண்டுள்ளது. இந்நிலையில் வைல்ட் கார்ட் போட்டியாளராக களமிறங்கிய சீரியல் மற்றும் சினிமா நடிகை ஆயிஷாவுக்கு சிறப்பு பவர் ஒன்றைக் கொடுத்து அனுப்பி உள்ளார்கள். இதில் என்ன விஷயம் என்றால் அதைக் கொடுத்தது தமிழ் பிக் பாஸை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி தான். அது என்ன பவர் என்பது குறித்து பார்த்துவிடலாமா?

பிக்பாஸ் தெலுங்கு அதிரடியாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. தமிழ் பிக்பாஸ் கொஞ்சம் மொக்கையாக போய்க்கொண்டு உள்ளது என்ற விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கும் போது, " தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி தெரிஞ்சா அந்த பிக்பாஸையே பார்த்துட்டு போயிடலாம் போலயே என்று பேசி வருகிறார்கள் ரசிகர்கள். விட்டால் சப் டைட்டில் போடுங்க என்று கோரிக்கை கூட வைப்பார்கள் போல. அந்த அளவுக்கு தமிழ் பிக் பாஸ் மீது ரசிகர்களுக்கு ஈர்ப்பு இல்லாமல் சென்றுவிட்டது.

Vijay Sethupathi Gives Power OF Nomination To Telugu Bigg Boss Wildcard Contestant Ayesha
Photo Credit:

வைல்ட் கார்ட்: இந்நிலையில் தெலுங்கு பிக் பாஸில் வைல்ட் கார்ட் போட்டியாளராக களமிறங்கி உள்ளார், பொன்மகள் வந்தாள் சீரியல் மூலம் பிரபலமான ஆயிஷா. பொன்மகள் வந்தாள் சீரியல் இயக்குநருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அதில் இருந்து விலகினார். அதன் பின்னர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மாயா சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தினார். அதன் பின்னர் சத்யா சீரியலிலும் கலக்கு கலக்கினார்.

ஆயிஷாவுக்கு பவர்: இவர் ஒருமுறை அளித்த பேட்டியில் தனக்கு மிகவும் பிடித்த சினிமா நடிகர் என்றால் அது விஜய் சேதுபதிதான் என்றும், அஜித்தும் மிகவும் பிடிக்கும் என்றும் கூறினார். இப்படி இருக்கும்போது இவருக்கு தெலுங்கு பிக்பாஸில் போட்டியாளராக களமிறங்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுவும் வைல்ட் கார்ட் போட்டியாளராக களமிறங்குகிறார் ஆயிஷா. இந்நிலையில் இவருக்கு சிறப்பு பவர் ஒன்றைக் கொடுத்து வீட்டிற்குள் அனுப்பி உள்ளார்கள். இந்த சிறப்பு பவரை அவருக்கு கொடுத்தவர் தமிழ் பிக்பாஸை தொகுத்து வழங்கி வரும் விஜய் சேதுபதிதான். அதாவது இவருக்கு, Power Of Nomination என்ற பவரைக் கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். தற்போது இது தொடர்பான செய்திகள் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X