கடவுள் இருக்காரான்னு தெரியல.. திடீர்னு கமல் மாதிரி பேசிய விஜய் சேதுபதி.. எல்லாருக்கும் டிராபி!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியாளருக்கு மட்டுமே டிராபி கொடுக்கப்பட்டு வந்த நிலையில், சில சீசன்களில் டம்மி டிராபிக்களை ஆரம்பத்திலேயே கொடுத்து உடைக்கச் சொன்னதை எல்லாம் பார்த்துள்ளோம். மேலும், கமல்ஹாசன் தனிப்பட்ட முறையில் சில பரிசுகளை போட்டியாளர்களுக்கு வழங்குவது வழக்கம்.

இந்நிலையில், இந்த சீசனில் தன்னை பொறுத்தவரை அனைவருமே வெற்றியாளர்கள் தான் என விஜய் சேதுபதி அனைவருக்கும் டிராபி கொடுத்து கெளரவித்த காட்சிகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.

Vijay Sethupathi talks about God and Mother at Bigg Boss Tamil 9 Grand Finale
Photo Credit:

மேலும், கேள்வி, பதில் நிகழ்ச்சியில், கடவுள் பற்றி விஜய் சேதுபதி பேசியதும் அம்மா பற்றி அவர் சொன்ன வார்த்தைகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

கடவுள் இருக்காரான்னு தெரியல: பிக் பாஸ் நிகழ்ச்சியை கடந்த சீசனில் தொகுத்து வழங்கிய போது ஏகப்பட்ட விமர்சனங்களை சந்தித்து ஒரு மாதிரி அப்செட் ஆனேன். ஆனால், அதன் பின்னர், இந்த சீசன் நாம தான் ஹோஸ்ட் பண்றோம் என்று வந்ததுமே எல்லாத்தையும் பார்த்துக்கலாம் என முடிவு செய்துவிட்டேன் என்றார். அதன் பின்னர், அம்மா குறித்து பேசிய விஜய் சேதுபதி, கடவுள் இருக்காரான்னு தெரியல, ஆனால், அந்த கடவுள் உணர்வை ஒவ்வொருத்தருக்கும் தருவது அம்மா தான் என விஜய் சேதுபதி பேச பலரும் பாராட்டி வருகின்றனர்.

கமல்ஹாசன் வந்துட்டாரே: திடீரென ரசிகர்கள் விஜய் சேதுபதி கடவுள் பற்றியெல்லாம் பேசியதை கேட்ட ரசிகர்கள் என்ன திடீரென விஜய்சேதுபதிக்குள் கமல்ஹாசன் வந்துட்டாரே என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

அனைவருக்கும் டிராபி: அந்த மனசு தான் சார் கடவுள் என சொல்வது போல விஜய் சேதுபதி செய்த விஷயத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். இத்தனை வாரங்கள் போராடி விளையாடிய அனைத்து போட்டியாளர்களுக்கும் ஒரு நினைவுப் பரிசை விஜய் சேதுபதி வழங்கி அனைவரையும் சந்தோஷப்படுத்தி யாரும் எம்டி ஹேண்ட் ஆக போகாமல் இருக்காத வண்ணம் பார்த்துக் கொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X