9 வருஷமா டிவில பார்த்தாச்சு... இனி நேரடியா பிக் பாஸ் வீடுதான்..காமன் மேன் என்ட்ரி!

சென்னை: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடைபெறும் சண்டை, கலாட்டா, கொண்டாட்டம், காதல், கிசுகிசு, சர்ச்சை என அனைத்தும் பார்வையாளர்களை கவர்ந்துள்ளதால், கடந்த 9 ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை 9 சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், புதிய சீசனுக்கான பணிகளை விஜய் டிவி நிர்வாகம் தொடங்கியுள்ளது. இந்த முறை ரசிகர்களுக்கு ஒரு சிறப்பு வாய்ப்பை வழங்கும் வகையில் "பிக் பாஸ் காமன் மேன்" என்ற புதிய முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 10: பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி 2017ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை 9 சீசன்கள் நடந்து முடிந்து இருக்கும் நிலையில் 10 வது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. இதற்கான பணிகளை விஜய் டிவி நிர்வாகம் இப்போதே தொடங்கிவிட்டதற்கு ஆதாரமாக நேற்று ஒரு ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில் பேசும் விஜய் சேதுபதி இதுவரை இந்த நிகழ்ச்சியை பார்த்த 'காமன் மேன்' இதில் கலந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Vijay Vijay Tv Bigg Boss
Photo Credit:

பிக் பாஸ் காமன் மேன்: இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள பொதுமக்கள், தங்களது சுயவிவரத்துடன், "ஏன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புகிறேன்?" என்பதைக் இரண்டு நிமிட வீடியோவை "vijay.jiostar.com" என்ற தளத்தில் பதிவேற்ற வேண்டும். அதிலிருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் வாய்ப்பு வழங்கப்படும். கடந்த சீசனைப் போலவே இந்த சீசனையும் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல ஆண்டுகளாக தொலைக்காட்சியில் மட்டுமே பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து ரசித்து வந்த ரசிகர்களுக்கு, தற்போது நேரடியாக அதில் பங்கேற்கும் வாய்ப்பை விஜய் டிவி வழங்கியுள்ளது. இதற்கான புரோமோ வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்று,பலரும் ஆர்வத்துடன் விண்ணப்பிக்கத் தயாராகி உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X